சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன அதிபருக்கு ஏன் கடிதம் எழுதவில்லை.. "இந்தியன்" கமலிடம் காயத்ரியின் "புத்திசாலித்தன" கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: சீன அதிபருக்கு ஏன் கடிதம் எழுதவில்லை என கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு கேள்வியை கமல்ஹாசனிடம் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. இந்த நிலையில் இந்த திட்டமிடப்படாத ஊரடங்கால் ஏழை மக்கள் பட்டினியை சந்தித்து வருகிறார்கள் என ஒரு பேச்சு நிலவுகிறது.

இதையடுத்து நேற்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக ஒரு கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியிருந்தார்.

கொரோனா.. மக்களை மீட்க மருத்துவராக மாறிய அயர்லாந்து பிரதமர்!.. வாவ் கிரேட்! கொரோனா.. மக்களை மீட்க மருத்துவராக மாறிய அயர்லாந்து பிரதமர்!.. வாவ் கிரேட்!

3 பக்கங்கள்

3 பக்கங்கள்

அதில் அவர் ஊரடங்கு உத்தரவை திட்டமிடாமல் அமல்படுத்தியது, அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத ஏழைகளை விளக்கேற்ற சொன்னத, பணமதிப்பிழப்பை போல் இந்த நடவடிக்கையால் மக்கள் அவதிப்படுவது உள்ளிட்டவற்றை தொகுத்து 3 பக்கங்களை கொண்ட கடிதத்தை எழுதியுள்ளார். மிகவும் காட்டமாக இருந்த கடிதத்தை பெரும்பாலானோர் பாராட்டினர்.

துயரங்கள்

துயரங்கள்

ஊரடங்கு உத்தரவால் மக்கள் படும் துயரங்களையும் 4 மாத காலஅவகாசம் இருந்த நிலையில் வெறும் 4 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியையும் மிகவும் அழகாக விவரித்திருந்தார். இந்த நிலையில் இதை பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள நீங்கள் ஏன் சீன அதிபருக்கு எழுதவில்லை.

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

ஏன் தப்லீகீ ஜமாத்துக்கு எழுதிவில்லை. ஏன் அவர்களது தோல்வியை சுட்டிக் காட்டக் கூடாது? அரசின் உத்தரவை மதிக்காமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்தார்கள் என கூறுகிறீர்களா, தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு கடிதம் எழுதுங்கள். உங்களுக்கு பிரச்சினை இருந்தால் முதலில் மாநில அரசுக்கு எழுதுங்கள்.

உணவில்லையா

உணவில்லையா

அவர்கள் உங்கள் கடிதத்தின் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதலாம். பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதுவது ஒரு டிரென்டாகிவிட்டதற்காக எழுதினீர்களா. இல்லை, ஞாயிற்றுக்கிழமை அனைவரும் விளக்கேற்றி ஒற்றுமையை காட்டியதற்காக அப்செட் ஆகிவிட்டீர்களா. நீங்கள் அந்த ஒற்றுமையில் பங்கேற்கவில்லை. உங்களுக்கு என்ன பிரச்சினை? மத்திய மற்றும் மாநில மக்களின் கடும் நடவடிக்கைகளை நீங்கள் பார்க்க தவறிவிட்டீர்களா. தமிழகத்தில் எந்த பகுதியில் மக்கள் உணவில்லாமல் அவதிப்படுகிறார்கள்? இனி தெளிவற்ற வெற்று கடிதங்களை எழுத வேண்டாம் என ஏதோ புத்திசாலித்தனமாக கேட்பது போல் காயத்ரி கேட்டுள்ளார்.

காயத்ரி

பிரதமர் என்பவர் நாட்டு மக்களுக்கு சொந்தமானவர். ஏதோ இவரது கட்சிக்கு மட்டுமே சொந்தமானவர் என்பதை போல் காயத்ரி ட்வீட் போட்டுள்ளது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது. திரையுலக ஜாம்பவானும் தனது குடும்ப நண்பருமான கமலை கலாய்த்துவிட்டால் பெரியாள் ஆகிவிடலாம் என்றும் கட்சியில் ஏதாவது பொறுப்பு வாங்கிவிடலாம் என்றும் காயத்ரி கருதுகிறாரா என்ன? நம் நாட்டு பிரச்சினைக்கு மோடிக்குத்தான் கடிதம் எழுத வேண்டும், சீன அதிபருக்கு ஏன் எழுத வேண்டும்? இனியாவது அறிவுப்பூர்வமாக காயத்ரி சிந்திக்க வேண்டும் என கமல் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

English summary
Gayathri slams Kamal Haasan for writing letter to PM. She also asks writing MODI ji is a fashion for trends?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X