சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபாசமாக சித்தரிப்பு .. தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது காயத்ரி ரகுராம் போலீசில் புகார்!

Google Oneindia Tamil News

சென்னை: தன்னை ஆபாசமாக சித்தரித்த தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் கொடுத்துள்ளார்.
பிரபல நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்கள் பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

இதில் காயத்ரி ரகுராம் போட்டோவை வெளியிட்ட தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் அவரை ஆபாசமாக விமர்சித்து இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது..

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு மூலம்... அதிமுகவை அச்சுறுத்த முயற்சி.. திமுக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்..!லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு மூலம்... அதிமுகவை அச்சுறுத்த முயற்சி.. திமுக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்..!

ஆபாச கருத்துக்கள்

ஆபாச கருத்துக்கள்

''தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் எனது வீடியோவை பகிர்ந்து அவதூறு கருத்துக்கள் பதிவிட்டிருக்கிறார். பெண்கள் மீதான ஆன்லைன் துன்புறுத்தலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுக்கு ஏற்கனவே புகார் தெரிவித்து இருந்தார் காயத்ரி ரகுராம். தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ''இது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல். ஏற்றுக்கொள்ள முடியாதது. குற்றவாளியை தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தார்.

 போலீஸ் கமிஷனரிடம் புகார்

போலீஸ் கமிஷனரிடம் புகார்

இந்த நிலையில் தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் காயத்ரி ரகுராம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்துள்ளார். தொடர்ந்து பெண்களை அவமதித்து வரும் ஜெயச்சந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது மிகவும் தவறு

இது மிகவும் தவறு

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்த பால்கனகராஜ் கூறியதாவது:- பா.ஜ.க பிரமுகர் காயத்ரி ரகுராமை தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் ஆபாசமாக சித்தரித்துளளார். காயத்ரி ரகுராம் வீடியோவை எடுத்துக்கொண்டு தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார். இவர் தி.மு.க.வை சேர்ந்த பெண்களை இதுபோல் செய்வாரா?

செந்தில் குமார் எம்.பி எங்கே போனார்?

செந்தில் குமார் எம்.பி எங்கே போனார்?

தி.மு.க ஆட்சியில் உள்ள நிலையில் தி.மு.க எம்.பி செந்தில் குமார், அல்லது கனிமொழி எம்.பி இதுபற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று பால்கனகராஜ் கூறினார். தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க மகளிர் அணியினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

English summary
Gayatri Raghuram has lodged a complaint against DMK leader Jayachandran Gayatri Raghuram has lodged a complaint with the Chennai Police Commissioner's Office seeking action against DMK leader Jayachandran for portraying himself as obscene
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X