சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது பொருளாதார மந்த நிலை அல்ல.. பொருளாதார நெருக்கடி நிலை.. எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்!

வெறும் பொருளாதார மந்த நிலை நிலவவில்லை, இந்தியாவில் இதற்கு முன் ஏற்படாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வெறும் பொருளாதார மந்த நிலை நிலவவில்லை, இந்தியாவில் இதற்கு முன் ஏற்படாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

இந்தியாவில் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் இந்தியாவின் ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது.நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபியில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது

GDP: This is not just an Economic Slowdown, this is an economic crisis says, M K Stalin

இந்த நிலையில் இந்த பொருளாதார நிலை குறித்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். அதில், ஜிடிபி 4.5%ஐ எட்டி இருக்கிறது. கடந்த 6 வருடத்தில் மிக மோசமான நிலையை ஜிடிபி எட்டியுள்ளது. இது வெறும் பொருளாதார மந்த நிலை கிடையாது. இது இதற்கு முன் ஏற்படாத பொருளாதார நெருக்கடி.

இந்த பிரச்சனையை அரசாங்கம் திசைதிருப்புவதை நிறுத்திவிட்டு. தங்களுடைய பொருளாதார திட்டங்களை செயல்படுத்த தொடங்க வேண்டும், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலைதான் ஸ்டாலின், பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் ஐடி ஊழியர்கள் பணி குறித்து - அதைத் தடுப்பதற்கு அக்கறை காட்டவும் இல்லை, கவலைப்படவும் இல்லை!, என்று டிவிட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
GDP: This is not just an Economic Slowdown, this is an economic crisis says, M K Stalin in his tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X