சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் ஓமிக்ரான் வைரஸை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு கூடம்.. மக்களுக்கு மா.சு முக்கிய வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் வைரசால் இந்தியாவும் உஷராகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

 மரபணு பகுப்பாய்வு கூடம்

மரபணு பகுப்பாய்வு கூடம்

இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வுகூடத்தில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கபட்டுள்ளது. புதிதாக உருமாறும் ஓமிக்ரான் வைரஸை கண்டறியும் வகையில் அமைக்கப்படுள்ள இந்த மரபணு பகுப்பாய்வு கூடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெல்டா வைரஸ்

டெல்டா வைரஸ்

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 5,40,69,791 ஆர்.டி பி.ஆர் சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை டி.எம்.எஸில் 23 லட்சம் மாதிரிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டி.எம்.எஸ் வளாக்த்தில் மரபணு பகுப்பாய்வு கூடத்தில் 469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்டுள்ள மரபணுக்களில்95% மேலாக அனைத்து மரபணுக்களும் டெல்டா வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அச்சுறுத்தல்

உலக சுகாதார நிறுவனம் அச்சுறுத்தல்

வெளிமாநிலங்களில் பரிசோதிக்கப்பட்ட 6714 மாதிரிகளில் 4618 மாதிரிகளுக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது. இதில் 96% டெல்டா வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தனி மரபணு சோதனை செய்துவருவது என்பது பெருமைக்குரியது. ஓமிக்கிரான் வைரஸ் உலகம் முழுவதும் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலை கடந்த இரண்டு மாதங்களாக நாம் கடைபிடித்து வருகிறோம். தமிழகத்தில் மட்டும் தான் அரசின் சார்பாக மரபணு பகுப்பாய்வு கூடும் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது

Recommended Video

    US Economyஐ பாதிக்கும் Omicron! அப்போ India? | OneIndia Tamil
    முகக்கவசம் அணிய வேண்டும்

    முகக்கவசம் அணிய வேண்டும்

    தென் ஆப்ரிக்காவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்ட அதே நாளில் நாம் விமானநிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளோம். சர்வதேச விமான நிலையங்களில் உதவி திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தருணத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    English summary
    A genetic analysis laboratory has been set up in Chennai to detect the Omicron virus. Tamil Nadu Health Minister Ma Subramanian has said that people must wear masks at this time
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X