சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தகர்கிறது நிறவெறி.. 'ஃபேர் அண்ட் லவ்லி' கிரீமில் 'ஃபேர்' என்ற வார்த்தை நீக்க போகிறார்களாம்.. சூப்பர்

ஃபேர் அண்ட் லவ்லி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சூப்பர்.. 'ஃபேர் அண்ட் லவ்லி' என்ற அழகு சாதன பொருளில் இருக்கும் 'ஃபேர்' என்ற வார்த்தையை மட்டும் நீக்கப் போவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது... இப்படி ஒரு முடிவுக்கு காரணம் உயிரிழந்த கறுப்பினர் ஜார்ஜ் தான்!

இந்தியாவில் கறுப்பு நிறமே பிரதானமாக இருந்த நிலையில், ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு, இந்த அடிப்படை மாறியது... வெள்ளை நிறத்தின் மீதான கவர்ச்சி அதிகமானது.

ஒரு குழந்தை பிறந்தால்கூட, அது கறுப்பா, சிவப்பா என்பதை சேர்த்தே சொல்வது பழக்கப்பட்டு விட்டதாகி விட்டது. கறுப்பு என்பது அழகு குறைவானதாகவும், மதிப்பு குறைவானதாகவும் பார்க்கப்பட்டுவிட்டது கொடுமையான விஷயம்.

ரஜினி சார் பேச வேண்டும்.. முதல்ல குரல் கொடுக்க வேண்டியது இதுக்குத்தான்.. இடித்துரைத்த ஷாநவாஸ்ரஜினி சார் பேச வேண்டும்.. முதல்ல குரல் கொடுக்க வேண்டியது இதுக்குத்தான்.. இடித்துரைத்த ஷாநவாஸ்

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை

கறுப்பாக இருக்கும் மக்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கி கொண்டனர்.. இந்த பலவீனத்தை அடிப்படையாக வைத்தே சில அழகு சாதன பொருட்களும் கிரீம்களை தயாரித்து காசு பார்க்க ஆரம்பித்துவிட்டன.

வித்தியாசம்

வித்தியாசம்

அந்த வகையில் ஒரு பொருள்தான் 'ஃபேர் அண்ட் லவ்லி'... நம் நாட்டில், பெண்கள், ஆண்கள் என வித்தியாசமே இல்லாமல் அதிகமாக உபயோகிக்கும் ஃபேர்னஸ் கிரீம்.. இது ஒரு ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.. வருஷத்துக்கு 560 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை ஆகி வருகின்றது.. கறுப்பு நிறமாக இருப்போர், அல்லது கலர் குறைவாக இருக்கும் பலர் சிவப்பழகை கூட்டிக் கொள்வதற்காக இதை பயன்படுத்தி வருகின்றனர்.. அதனால் இந்தியாவின் புகழ்பெற்ற காஸ்மெட்டிக்கில் இதுவும் ஒன்று.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்நிலையில்தான், ஹிந்துஸ்தான் நிறுவனம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஃபேர் அண்ட் லவ்லி என்பதில், 'ஃபேர்' என்ற வார்த்தையை நீக்க போவதாக சொல்லி உள்ளது.. இதற்கு காரணம் உலகமெங்கும் கறுப்பின மக்களின் மீது வன்முறைகள், கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறிவருவதுதான். அன்று ஜார்ஜை கொன்றதுகூட கறுப்பினர் என்ற நிறவெறியால்தான்.

தயாரிப்பு

தயாரிப்பு

"சிவப்பாக மாறுவதே அழகு" என்ற பொருளில் இது உள்ளதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.. அதேபோல, வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளையும் அதன் தயாரிப்பு பொருட்களில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இந்த பெயரை மாற்றுவதற்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகவும் நிறுவனம் காத்திருப்பதாகவும்.. ஒப்புதல் கிடைத்துவிட்டால், சில மாதங்களிலேயே இது நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சூப்பர்

சூப்பர்

இந்த விளம்பரத்தை ரொம்ப வருஷமாக பார்த்து வருகிறோம்.. ஆனால் இதுவரை யாராவது இந்த கிரீம் போட்டு சிவப்பாக மாறியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.. ஆனாலும் சிவப்பாக மாற்றக்கூடியது என்றே இந்த நிறுவனமும் விடாமல் விளம்பரம் செய்து வருகிறது.. தற்போது, இன சமத்துவமின்மை, அழகு தரங்கள் குறித்து உலகளாவிய விவாதம் நடைபெறுவதால் இந்த முடிவுக்கு இந்துஸ்தான் நிறுவனம் வந்துள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று!

English summary
george floyd: fair and lovely name to be changed and remove word fair
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X