சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

78,000.. உனக்கு ஓகேவா.. ரொம்ப பிடிச்சிடுச்சு.. சொல்றது அர்த்தம் புரியுதா.. பேசி சிக்கிய என்ஜீனியர்

கல்லூரி மாணவிக்கு மாநகராட்சி அதிகாரி பாலியல் தொல்லை தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மாசம் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறேன்.. உனக்கு ஓகேவா... ஏன்னா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.. நான் சொல்றது அர்த்தம் புரியுதா" என்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருவர் இளம்பெண்ணிடம் செல்போனில் வழிந்துள்ளார்.. இந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

யாரை எப்போ கொரோனா வந்து தூக்கிட்டு போயிடும் என்று தெரியாமல் இருக்கிறோம்.. யார் கையிலும் காசு இல்லை.. இந்த கொரோனா எப்போ போய் ஒழியும் என்றும் தெரியல.. அதுவும் சென்னைவாசிகள் நிலைமை கொடுமையோ கொடுமை.. பீதியில் இருக்கிறார்கள்.

 girl student complaint on chennai corporation asst engineer

இந்த தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.. இதனால், வீடுகள்தோறும் கணக்கு எடுக்கும் பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தன்னார்வலர்கள் போல் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்... இவர்களுக்கு முதலில் நாம் பாராட்டை தெரிவித்தாக வேண்டும்.

ஆனால், இவர்களிடமே கிளுகிளுப்பு வேலையில் ஈடுபடுவது எவ்வளவு அநியாயம்? சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி ஆபீசில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருபவர் கமலக்கண்ணன்.. இவர்தான் தன்னார்வ பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவி ஒருவரிடம் தனது சேட்டையை காட்டி உள்ளார். .. தனக்கு கீழ் அந்த மாணவி பணியாற்றி வந்ததால், ரூட் விட்டுள்ளார்.. அவர் பேசிய ஆடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது இதுதான்:

ஹலோ நான் அசிஸ்டெண்ட் என்ஜினியர் பேசறேன்

களத்தில் டெல்லி சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு.. சாத்தான்குளம் போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்கிறதுகளத்தில் டெல்லி சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு.. சாத்தான்குளம் போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்கிறது

மாணவி: சொல்லுங்க சார்

உதவி பொறியாளர்: உன்னை பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடியில... எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு.

மாணவி: சார் நீங்க பேசுவது எனக்கு புரியல.. என்கூட வேலை பார்க்கிற எல்லாருக்குமே என்னை பிடிக்கும். எனக்கும் அவர்களை பிடிக்கும்.

உதவி பொறியாளர்: உன்னை எனக்கு வேற விதமாக பிடிச்சிருக்கு.. அர்த்தம் புரிலையா?

மாணவி: நீங்க சொல்றது புரியவில்லை.. என்ன அர்த்தத்தில் சார் நீங்கள் சொல்றீங்கனு எனக்கு தெரியலை சார்.

உதவி பொறியாளர்: காலேஜில் 2ம் வருஷம் படிக்கிற... உன்னை விரும்புகிறேன்னு சொல்கிறேன்... அர்த்தம் உனக்கு புரியவில்லையா.

மாணவி: சார் புரியும்படி சொல்லுங்க.

உதவி பொறியாளர்: 2 வருஷத்துக்கு முன்பு நான் உன்னை பார்த்து இருந்தால், நீ எனக்கு இந்நேரம் வொய்ப் ஆகியிருப்பே.. உன்னை தான் கல்யாணம் முடித்திருப்பேன்.

மாணவி: சார்.. இப்படியெல்லாம் சொல்லி என்னை கலாய்க்காதீங்க சார்.

உதவி பொறியாளர்: உனது "டிக் டாக்" வீடியோ எல்லாம் பார்த்து ரசிப்பேன்.. உன்னை, என் ஹையர் ஆபீசர்ங்க கிட்ட பேசி நான்தான் உன்னை இந்த வேலையில் உட்கார வெச்சேன்...

மாணவி: சார் வீட்டில் ஆட்கள் இருக்காங்க, என்று சொல்லி செல்போனை கட் செய்து விடுகிறார்.

ஆனாலும் நம்ம என்ஜினியர் கமலக்கண்ணன் விடாமல் போன் செய்து கொண்டே இருந்துள்ளார்.. பொறுத்து பொறுத்து பார்த்த மாணவி, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, அவர் பேசியதை ரிக்கார்ட் செய்துவிட்டார். பிறகு, "தனக்கு பணி பாதுகாப்பு வேண்டும், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் அடிக்கடி போன் செய்து காதல் தொந்தரவு கொடுக்கிறார்" என்று சொல்லி அந்த ஆடியோவுடன் சென்னை கமிஷனரிடம் புகார் தந்துள்ளார்.

இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் மாணவிக்கு உறுதி அளித்துள்ளதா கூறப்படுகிறது. எனினும் மாணவி விடவில்லை... தனது பாதுகாப்புக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடமும் புகார் தந்துள்ளார். அதன்படி மகளிர் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிக்கு யாருமே முன்வராத நிலையில், இதுபோன்ற மாணவிகள் முன்வந்தால், இப்படித்தான் கேவலமாக நடத்துவதா? என்று பொதுமக்கள் கொந்தளித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

English summary
girl student complaint on chennai corporation asst engineer, and audio goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X