சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போராட்டத்தின் போது பிடித்த சம்பளத்தை திரும்ப கொடுங்க.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டிரைக்கின் போது பிடிக்கப்பட்ட சம்பளத்தை, உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக அரசை வலியிறுத்தியுள்ளது.

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி-யை அங்கன்வாடிகளில் இணைக்காமல், தொடக்கப்பள்ளிகளில் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் முத்துசாமி, முழுஅதிகாரம் பெற்ற தொடக்ககல்வி இயக்குனரகம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Give back the hold salary during the strike.. Tamilnadu Teachers Alliance request

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க முறையான விதிகள் பின்பற்றப்படுவதில்லை. எனவே இந்த வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கென புதிய விதிமுறைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை அரசுப்பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஆங்கில வழிக்கல்வியில் படிக்க அதிகம் பேர் விரும்புகின்றனர். எனவே அரசுதொடக்கப்பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்கென தனி ஊக்க ஊதியம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கமலின் பிளானே வேறு.. உத்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம! கமலின் பிளானே வேறு.. உத்வேகம் கொடுத்த லோக்சபா தேர்தல்.. புதிய திட்டத்துடன் களமிறங்கும் மநீம!

மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால், பிடித்த சம்பளத்தை ஆசிரியர்களின் வங்கிக்கணக்கில் அரசு செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

English summary
Tamilnadu Editorial Coalition has urged the Tamil Nadu government to pay the wage paid during the strike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X