சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

களம் குதிப்பாரா ஜி.கே.வாசன்.. மயிலாடுதுறையை வலம் வருமா தமாகா சைக்கிள்?

மயிலாடுதுறையில் தமாகா தலைவர் ஜிகே வாசன் போட்டியிட வாய்ப்பு என தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜி.கே.வாசன் மயிலாடுதுறையை சைக்கிளில் வலம் வருவாரா?-வீடியோ

    சென்னை: மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி நடத்தி வரும் வாசன் இதுவரை யாருடன் கூட்டணி என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. எனினும் அதிமுகவில் சேருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாக சொல்லப்படுகிறது.

    எப்படியும் 3 சீட்டாவது வேண்டும் என்று அடம்பிடிப்பதால்தான் இந்த கூட்டணி இழுபறியே. தமாகாவை கூட்டணிக்குள் இழுத்து போட்டு விட்டால், காங்கிரசை பலவீனப்படுத்த முடியும் என, அதிமுக நினைக்கிறது. இது ஒன்றுதான் தமாகாவுடன் கூட்டணி பேச காரணம்.

    2 சீட்டுகள்

    2 சீட்டுகள்

    அதுக்காக ஒரேடியாக 3 தொகுதிகளை தர முடியாது என்று சொல்கிறது அதிமுக. மயிலாடு துறை, பெரம்பலுார், நீலகிரி, ஈரோடு, மதுரை, நெல்லை இதிலிருந்து ஏதாவது 3 வேண்டும் என்று வாசன் கேட்க, எடுத்த எடுப்பிலேயே நோ சொல்லியதுடன், வேண்டுமானால் 2 தொகுதிகள் தருகிறோம் என்கிறது அதிமுக.

    தஞ்சாவூர்

    தஞ்சாவூர்

    ஆனால் 2, 3 எந்த தொகுதியாக இருந்தாலும் மயிலாடுதுறை கண்டிப்பாக வாசனுக்கு என்று முடிவாகி உள்ளது. முதல்முறையாக வாசன் இந்த தொகுதியில் நிறுத்தப்பட்டாலும் அதற்கு காரணம் இவர் ஜமீன் என்று சொல்லக்கூடிய ஒரு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். தஞ்சாவூர்க்காரர்.

    மணிசங்கர் அய்யர்

    மணிசங்கர் அய்யர்

    திமுக கூட்டணி சார்பாக மயிலாடுதுறையில் நிறுத்தப்படுவது மணி சங்கர் அய்யர் என சொல்லப்படுகிறது. மணிசங்கருக்கும் இது சொந்த தொகுதிதான். ஏற்கனவே 2 முறை இங்கு வெற்றி பெற்று டெல்லி சென்றவர். அதனால் தொகுதி நன்றாக பரிச்சயம். மக்கள் செல்வாக்கு அதிகம். ஐயர் சமூகத்தின் ஓட்டுக்களும் இவருக்கு நிரந்தரமாக உண்டு. மயிலாடுதுறை கும்பகோணம் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் ஐயர் ஓட்டுகள் நிறைய உண்டு. இருந்தாலும் இந்த தொகுதியை பொறுத்தவரை வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது தேவேந்திர குல வேளாளர் சமுதாயம்தான்!

    கடுப்பில் மக்கள்

    கடுப்பில் மக்கள்

    இவரை தோற்கடிக்க ஜிகே வாசனால் மட்டுமே முடியும் என்று அதிமுக கருதுகிறது. அது மட்டும் இல்லை, கஜா புயல் பாதிப்பினால் அதிமுக மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் தொகுதி மக்கள். அதனால் நேரிடையாக அதிமுக இங்கு போட்டியிட முடியாது. கோபத்தை தணிக்க ஜிகே வாசன்தான் சரியான நபர் என்று யோசிக்கிறது அதிமுக.

    சைக்கிள்

    சைக்கிள்

    ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் சின்னம்தான். இரட்டை இலையில் அதிமுக வாசனை நிறுத்த யோசித்து வருகிறது. ஆனால் சைக்கிளை விட மாட்டேன் என்கிறார் வாசன். உண்மையிலேயே இரட்டை இலையில் வாசன் போட்டியிட்டால் தோல்வியை தழுவுவார் என்கிறார்கள். சைக்கிள் சின்னம் நின்றால் மணி சங்கர் அய்யருக்கு டஃப் கொடுக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் சின்னம்தான். இரட்டை இலையில் அதிமுக வாசனை நிறுத்த யோசித்து வருகிறது. ஆனால் சைக்கிளை விட மாட்டேன் என்கிறார் வாசன். உண்மையிலேயே இரட்டை இலையில் வாசன் போட்டியிட்டால் தோல்வியை தழுவுவார் என்கிறார்கள். சைக்கிள் சின்னம் நின்றால் மணி சங்கர் அய்யருக்கு டஃப் கொடுக்க வாய்ப்பு உண்டு.

    மூப்பனார்

    மூப்பனார்

    வாசன் இதுவரை நேரடியாக தேர்தல் களத்தில் குதித்ததில்லை. அதாவது நேரடி தேர்தலில் போட்டியிட்டதில்லை. ராஜ்யசபா எம்.பியாகத்தான் இருந்திருக்கிறார். எனவே மயிலாடுதுறையில் அவர் போட்டியிட்டால் அது பெரும் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும். மூப்பனாரின் மகனுக்கு உரிய அங்கீகாரத்தை காவிரி டெல்டா தருமா என்பதையும் அறிய முடியும்.

    English summary
    TMC Leader GK Vasan is said to have a chance to contest in Mayiladuthurai Consititution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X