India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரோட்டில் நின்று சவால் விட்ட வாசன்.. "ஜஸ்ட் டிரைலர்தான்"..திமுகவுக்கு நறுக்குன்னு 4 கேள்வி.. அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை கேள்வி எழுப்பி, மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார் தமாகா தலைவர் ஜிகே வாசன்.. இதனால் தமிழ்மாநில காங்கிரஸ் சூடுபிடித்துள்ளது.

திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாகவே இருந்தாலும் சரி, வாசனுக்கென்று ஒரு சாப்ட் கார்னர் தமிழக அரசியல் களத்தில் இருக்கவே செய்கிறது.

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

அதனால்தான் தமாகா தொடங்கியபோதுகூட, முக்கிய நிர்வாகிகள் வாசனை மலைபோல நம்பி வந்தனர்.. ஒருமுறை, பிரதமரை வழியனுப்ப ஜிகே வாசன் சென்னை ஏர்போர்ட் வந்தபோது மோடியால் பெரிதும் கவனிக்கப்பட்டார்..

 திமுக

திமுக

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா 6 தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத சோக நிலைதான் ஏற்பட்டது.. 12 தொகுதிகளை கேட்டு 6 சீட்தான் கிடைத்தது.. அதிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சொன்னதை ஏற்று போட்டியுமிட்டார்.. நோட்டாவில் இருந்த பாஜககூட, வெற்றி பெற்று மேலேழுந்து வரும்போது, தமாகாவால் மட்டும் வெற்றியை எட்ட முடியாமல் சறுக்கி கொண்டிருப்பது அக்கட்சிக்கு தொடர் பின்னடைவாகி வருகிறது.

 வீரப்பன்சத்திரம்

வீரப்பன்சத்திரம்

திமுக ஆட்சிக்கு வந்தபிறகும்கூட, வாசன் சில பேட்டிகளை மட்டும் தருகிறார்.. சில அறிக்கைகளை வெளியிடுகிறாரே மற்றபடி பெரிதாக அரசியலில் ஆக்டிவ்வாக இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் தமாகா இன்று திமுகவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திவிட்டது.. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 வாசன் பேச்சு

வாசன் பேச்சு

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய ஜிகே வாசன், "தமிழக மக்களின் சுப, துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் கட்சியாகவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சியாகவும் தமாகா செயல்பட்டு கொண்டிருக்கிறது..,. கொங்கு மண்டலத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இனிமேல் நடக்க போகிறது.. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் 5வது பெரிய போராட்டம் இது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

 வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

திமுகவின் வாக்குறுதிகளை நம்பி் மக்கள் ஏமாந்துள்ளனர்... இதில் மக்கள் தலையில் பேரிடியாக வந்து விழுந்தது, சொத்து வரி உயர்த்தப்பட்டதுதான்.. இதனால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்... 20 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது.. நீங்கள் சொல்லும் அதே திராவிட மாடல் அடிப்படையில் சொத்து வரியை குறைத்திருக்கலாமே? கூட்டணி கட்சிகளும் இதை பற்றி வாய் திறக்கவில்லை.

மதுக்கடைகள்

மதுக்கடைகள்

நீங்கள் உங்கள் கூட்டணி கட்சிகளை கட்டுப்படுத்தலாம்.. ஆனால் தமிழக மக்களை கட்டுப்படுத்த முடியாது. மக்களுக்கு இப்படியா துரோகம் செய்வது? மின்வெட்டு இப்போது அதிகரித்துள்ளது... படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள். வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டாவது, மதுக்கடைகளை மூடுங்கள்.. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வாருங்கள்" என்றார் ஜிகே வாசன்.

English summary
GK vasan slams dmk government and cm mk stalin in erode tmc protest திமுகவை கண்டித்து தமாகாவின் ஜிகே வாசன் போராட்டம் நடத்தினார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X