• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"பச்சை துரோகம்".. தலக்கு தில்.. காங். to தமாகா to அதிமுக to அமமுக to திமுக.. இப்ப இப்டி ஒரு முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: திமுக, அதிமுக கட்சிகளை போலவே, தமாகா களமும் படுசூடாக தகித்து கொண்டிருக்கிறது.. தமாகா பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த ஞானசேகரன், மறுபடியும் திமுக பக்கம் ஜம்ப் ஆகி இருக்கிறார்.. அப்படி அந்த கட்சிக்கு போகும்போது, வாசனை கடுமையாக விமர்சித்துவிட்டு சென்றுள்ளார். இதுதான் ஹாட் டாப்பிக்காக ஓடி கொண்டிருக்கிறது.

மூப்பனார் தமாகாவை தொடங்கிய போது, அப்போதிருந்தே முக்கிய ஸ்தானத்தை பெற்றவர் ஞானசேகரன்.. பிறகு காங்கிரஸ் வந்தார்.. ஆனால், தமாகா இணைந்த போதும் சரி, வாசன் தனியாக தமாகாவை ஆரம்பித்த போதும் சரி, அவருடனேயேதான் முக்கிய நபராக வலம் வந்தார்.

பிறகு, திடீரென ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்... அதற்கு பிறகு ஜெ.மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனிடம் சேர்ந்தார்... அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.. இப்படிதான் ஞானசேகரன் அரசியல் பயணம் நகர்ந்தது.

திமுக

திமுக

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 1991 முதல் 2011 வரைக்கும் தொடர்ந்து 20 வருஷம் வேலுார் தொகுதி எம்எல்ஏவாக இருப்பதுதான்.. இவர் திமுகவுக்கு சென்றபோதும்கூட சரி, தொகுதியில் இவருக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து, வேலூர் தொகுதி இவருக்கு ஒவ்வொரு முறையும் வழங்கப்பட்டுவிடும்.

கலைஞர்

கலைஞர்

அதுமட்டுமல்ல, இவர் சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்... சட்டசபை விவாதங்கள் என்றாலே ஞானசேகரன் தான் ஸ்பெஷல் நபர்.. மிக சிறப்பாக செயல்பட்டவர்.. அன்றைய முதல்வராக இருந்த கலைஞரே, இவருடைய சட்டசபை செயல்பாடுகளை பலமுறை பாராட்டி பேசியிருக்கிறார் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

இப்போது விஷயம் என்னவென்றால், தமாகா பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த ஞானசேகரன், திருவிக நகர் தொகுதியில் போட்டியிட ஜிகே வாசனிடம் விருப்ப மனு அளித்திருக்கிறார்.. இதற்கு காரணம் இது தனி தொகுதி.. அதுமட்டுமல்ல, இவரது சொந்த தொகுதியும் கூட.. அதனால்தான் இங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது..

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால் ஷாக் ஆன ஞானசேகரன், அதிருப்திக்கு ஆளானார்.. இதுவரை வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தமாகாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இதற்கு ஞானசேகரன் வாசன் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வாசன்

வாசன்

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ஞானசேகரன், "30 வருஷமாக அரசியலில் இருக்கிறேன்.. எனக்கு தமாகாவினர் இதுவரை எதுவும் செய்ததில்லை. திருவிக நகர் தொகுதி எனது தொகுதி.. . பட்டியல் சமூகத்தை சேர்ந்த நான் அதில் போட்டியிட வாசனிடம் விருப்பம் தெரிவித்தேன்... அதே போல பூந்தமல்லி தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். ஆனால் தரவில்லை..

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தமாகா வேட்பாளர்களை எனக்கு தகுதி அதிகம்... பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் முன்னேற கூடாது என்று நினைக்கிறார்கள்.. அதனால் வேறு கட்சியில் இணைவது குறித்து முடிவு செய்வேன்... திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம். தனித்து போட்டியிடுவது என்பது, இவ்வளவு நாள் இருந்த கட்சிக்கு செய்யும் துரோகமாக அமையும் என்பதால் திருவிக நகரில் போட்டியிடவில்லை. தமாகாவில் சாதிப் பாகுபாடு இருக்கிறது... மொத்தமுள்ள 6 வேட்பாளர்களில் 3 பேர் வாசனின் சொந்தக்காரர்கள்..

பச்சை துரோகம்

பச்சை துரோகம்

வாசன் எனக்கு பச்சைத் துரோகம் செய்துவிட்டார்... தலித் மக்கள் உயர் பதவிகளுக்கு வரக்கூடாது என வாசன் நினைக்கிறார்... வாசன் சுயமாக முடிவெடுக்க இயலாத தலைவர்... அவருடன் இருப்பதால் பயனில்லை... என்னுடன் 5,000 பேர் சேர்ந்து வெளியேறுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

கட்சி தாவல்

கட்சி தாவல்

ஞானசேகரனின் இந்த செயல்பாடும் சரி, கட்சி தாவலும் சரி, தமாகாவில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இப்படித்தான் வாசன் துரோகமிழைத்து விட்டதால், எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என்று கோவை தங்கம் அறிவித்திருந்தார்.. இப்போது அடுத்த புள்ளியும் எகிறி உள்ளது சலசலப்பை கூட்டி கொண்டிருக்கிறது.

English summary
GK Vasans TMC Executive left from party and supports DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X