அண்ணாமலை ரூமில் “கண்ணாடி கதவு”.. வலதுசாரியின் “டபுள் மீனிங்” -உங்க வீட்டு பெண்களை.. கொதித்த காய்த்ரி
சென்னை: குஷ்பு, காய்த்ரி காரணமாக கண்ணாடி கதவு போடப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்ததை சுட்டிக்காட்டி ட்விட்டரில் விமர்சித்த வலதுசாரி ஆதரவாளரான ஸ்ரீராம் சேஷாத்ரிக்கு காய்த்ரி ரகுராம் காட்டாமாக பதிலளித்து இருக்கிறார்.
பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, பாஜக சிறுபான்மை அணி தலைவர் டெய்சியை செல்போனில் தகாத வார்த்தைகளால் திட்டிய ஆடியோ வெளியாகி கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது
பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் இந்த ஆடியோவை வெளியிட்ட ஊடகத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்து சூர்யா சிவாவை விமர்சித்து இருந்தார். "இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு." என்று அவர் சாடினார்.
மேடையில் மன்னிப்பு கேட்கணும்.. “அவன் கோழை”.. கோர்ட் ஏற்றுக்கொண்டாலும் ஆவேசமாக கொந்தளிக்கும் குஷ்பு!

அண்ணாமலை நடவடிக்கை
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாத காலத்திற்கு அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதேபோல் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.

இணைந்த சூர்யா டெய்சி
இந்த ஆடியோ வெளியான் சில நாட்களிலேயே திருச்சி சூர்யாவும் டெய்சியும் இணைந்து பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது டெய்சி, "திருச்சி சூர்யா எனக்கு தம்பியை போன்றவர். எங்களுக்கு இடையே அக்கா - தங்கை போன்ற உறவு உள்ளது." என்று கூறினார். இதனை தொடர்ந்து, சூர்யா சிவாவை கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார் அண்ணாமலை.

தொடர் பதிவுகள்
இதனை தொடர்ந்து பாஜகவில் ஆடியோ சர்ச்சை ஓயும் நினைத்தாலும் அடுத்தடுத்து அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இது பற்றி காயத்ரி ரகுராம், டெய்சி, திருச்சி சூர்யா மற்றும் பாஜக பிரமுகர்கள் நேர்காணல்கள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்துக்கொண்டே வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் காயத்ரி ரகுராம் கட்சி மற்றும் யார் பெயரையும் குறிப்பிடாமல் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

தலைமையை காக்க பொய்
அதில், "உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களைச் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். தலைவனாக சித்தரிக்கும் முன் மனிதனாக இரு. நான் இதை ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆனால் இப்போது கருத்துகளைப் படிக்கிறேன். ஏன் இவ்வளவு வெறுப்பு? படித்ததை பிடித்தது, இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்று நினைத்தேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

கண்ணாடி கதவு
தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்ட காய்த்ரியிடம் நெறியாளர், "குஷ்பு, காயத்ரியால் கண்ணாடி கதவு போடப்பட்டதாக அண்ணாமலை ஏன் கூறினார்?" என்று கேள்வி எழுப்ப, "சொன்னார். ஏன் என்று தெரியவில்லை. நிறைய பேர் என்னை அசிங்கப்படுத்துவதைபோல் போட்டார்கள்." என பதிலளித்தார் காய்த்ரி.

ஸ்ரீராம் சேஷாத்ரி
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு உள்ள வலதுசாரி ஆதரவாளரான ஸ்ரீராம் சேஷாத்ரி, "அந்த கண்ணாடி கதவு போட்டதுதான் பலருக்கு எரிச்சல், அது மட்டும் இல்லை என்றால் கண்டபடி குற்றம் / பழி கூறியிருக்கலாம். என்ன இருந்தாலும் போலீஸ் அல்லவா, இப்படிப்பட்டவர்கள் பற்றி தெரியாமலா இருக்கும்.." என்று குறிப்பிட்டு இருந்தார்.

உங்க வீட்டு பெண்களை..
ஸ்ரீராம் சேஷாத்ரியின் இந்த பதிவை ட்விட்டரில் ரீட்வீட் செய்து பதிலளித்த நடிகை காயத்ரி ரகுராம், "மோசமான ரசனை. உங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பெயர்களை குறிப்பிட்டு உங்களை நீங்கள் திருப்திப்படுத்தி இருக்கலாம். தலைவர் போன்றே கேலிகளும்." என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.