சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியில் போங்க.. வானத்தைப் பாருங்க.. விண்கல் பொழிவை ரசிங்க!

Google Oneindia Tamil News

சென்னை: நல்ல பொறுமை, ஆர்வம், கொஞ்சம் லைட்டா விண்வெளி ஞானம்.. இவ்வளவு போதும்.. நீங்க இப்ப விண்கல் பொழிவை ரசிக்க ரெடி பாஸ்.

இன்று இரவு முதல் 14ம் தேதி அதிகாலை வரை விண்கல் பொழிவைப் பார்த்து ரசிக்கலாம். ஜெமினிட் விண்கல் பொழிவுதான் இன்று இரவு நமது தலைக்கு மேல் அரங்கேறுகிறது.

Go and enjoy the Geminid meteor shower

வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கது சேதி தரும் என வைரமுத்து சும்மா பாடி வைக்கவில்லை. வானத்தில் அத்தனை அத்தனை மேட்டர் இருக்கு. இன்று நடக்கும் இந்த விண்கல் பொழிவும் கூட நாம் தவற விடக் கூடாத ஒரு கண்கவர் காட்சிதான்.

இந்த ஆண்டின் முதல் மற்றும் கடைசி விண்கல் பொழிவு இது. குளிராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இதைப் பார்த்து ரசிங்க. இதைப் பார்க்க எந்த சாதனமும் தேவையில்லை. வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம். பொறுமையாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்.

வானம் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். நல்ல இருட்டான இடத்தில் இதைப் பார்ப்பது நல்லது. அப்போதுதான் தெளிவாக காண முடியும். வெளிச்சத்திற்கு மத்தியில் இருந்து கொண்டு இதைக் காண முடியாது. நாளை அதிகாலை வரை இதைப் பார்க்கலாம்.

எல்லாம் சரி ஜெமினிட் என்றால் என்ன.. அது ஏன் விழுகிறது.. அது வேற ஒண்ணும் இல்லை, வெறும் குப்பைதான் இது. அதாவது 3200 பேதான் (3200 Phaethon) என்ற விண்கல்லிலிருந்து வரும் குப்பைகள்தான் விழுகின்றன. வருடா வருடம் டிசம்பரில் இது நடைபெறும்.. அதாவது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் போல. இதில் டிசம்பர் 13ம் தேதி இரவு தொடங்கி 14ம் தேதி அதிகாலை வரை அதிக அளவில் இடம் பெறும். இதனால் இதை நாம் தெளிவாக பார்க்க முடியும்.

3200 பேதான் விண்கல்லானது ஒருமுறை சூரியனைச் சுற்றி வரை 1.43 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த விண்கல்லின் வால் பகுதியை நமது பூமி கடந்து போகும்போது இதை நாம் பார்க்க முடிகிறது.

விண்கல் பொழிவானது நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தின் வழியாக இவை பொழியும். எனவேதான் ஜெமினிட்ஸ் என்று பெயர். வானத்தின் வடக்கில் இதைப் பார்த்து ரசிக்கலாம். விநாடிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் இவை விழுவதால் எளிதாக அடையாளம் காண முடியும்.

என்ன கிளம்பிட்டீங்களா.. மொட்டை மாடிக்கு!

English summary
Geminid meteor shower is back and we can see the shower from 13th night to 14th early morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X