சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோ பேக் மோடி vs கோ பேக் சோனியா... ட்வீட்டரில் நடந்த கருத்து போர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வரும் சோனியா காந்திக்கு எதிராக ட்வீட்டரில் #GoBackSonia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வரும் சோனியா காந்திக்கு எதிராக ட்வீட்டரில் #GoBackSonia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

திமுக ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் காரசாரமாக பேசி ட்வீட்டரில் மோதி வருகின்றனர். யார் இதில் முதலிடம் பெறுவார்கள் என்பது தான் கேள்வியாக பார்க்கப்படுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அண்ணா, கருணாநிதியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு சிலைகளை திறக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

சோனியா காந்தி பங்கேற்பு

சோனியா காந்தி பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர். இதனையொட்டி, சென்னை விமானநிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் அஞ்சலி

சிலை திறப்பு விழா முடிந்த பின் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று சோனியா அஞ்சலி செலுத்த உள்ளார். தலைவர்கள் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்து மோதல்

கருத்து மோதல்

திமுக ஆதரவாளர்கள் #StatueOfKalaignar என்ற ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் #StatueOfCorruption என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற செய்துள்ளனர். அதே நேரம், சோனியா காந்தியை திரும்பச் செல்லக்கோரி #GoBackSonia என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகிறது.

மோடி டிரெண்டிங்

மோடி டிரெண்டிங்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. அப்போது, திமுக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தியது. வான் உயர பலூன்களை பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், #GoBackModi என்ற ஹாஷ்டேக் தீயாக பரவியது. சென்னை டிரெண்டிங் இடம்பிடித்த அடுத்த சிலமணி நேரங்களில் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரெண்டானது.

சோனியா டிரெண்டிங்

சோனியா டிரெண்டிங்

உலகளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பெற்ற #GoBackModi என்ற ஹாஷ்டேக்கிற்கு இணையாக #GoBackSonia என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளமான ட்வீட்டரில் பரவி வருகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணியின் போது கண்டனத்திற்குரிய செயலாக பார்க்கப்பட்ட சம்பவங்களை குறிப்பிட்டு பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

English summary
#GoBackSonia hashtag created against Sonia Gandhi who comes to Chennai attend the statue opening ceremony of former Chief Minister Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X