சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை பற்றி".. #GoBackStalin.. திணறிப் போன டிவிட்டர்!

கோ பேக் ஸ்டாலின் ட்விட்டரில் இன்று ட்ரெண்டானது

Google Oneindia Tamil News

சென்னை: எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை பற்றியும் ஆன்மீகத்தையும், அவதூறு செய்யும் ஸ்டாலின், தேவருக்கு அஞ்சலி செலுத்த கூடாது, என்று கோ பேக் ஸ்டாலின் #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கை ட்விட்டர்வாசிகள் பதிவிட்ட ஹேஷ்டாக் டிரெண்டானது.. அதுவும் இந்திய அளவில் டிரெண்ட் ஆனதுதான் இங்கு கவனிக்கத்தக்க விஷயம்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த மற்றும் நினைவு நாள் இன்று. ஒவ்வொரு வருஷமும் அவரது நினைவிடத்தில் ஜெயந்தி, குரு பூஜை நடப்பது வழக்கம்.

அதேபோல, அரசியல் கட்சி தலைவர்களும் அவரது நினைவிடம் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்துவர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலினும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒப்புதல் கொடுத்த ஆளுநர்.. ஒன்றுபட்டு சாதித்த எடப்பாடி- ஸ்டாலின்.. சபாஷ்! இதுதான் எங்களுக்கு தேவை! ஒப்புதல் கொடுத்த ஆளுநர்.. ஒன்றுபட்டு சாதித்த எடப்பாடி- ஸ்டாலின்.. சபாஷ்! இதுதான் எங்களுக்கு தேவை!

 எதிர்ப்பு

எதிர்ப்பு

ஆனால் அவர் அஞ்சலி செலுத்த துவங்கியபோதே சோஷியல் மீடியாவில் எதிர்ப்பு கிளம்பி விட்டது.. தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் வாழ்ந்தவர் தேவர்.. அவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு.. ஆனால் ஆன்மீகத்தையும், இந்து மதத்தை பற்றியும் எப்போதும் அவதூறு செய்யும் ஸ்டாலின், தேவருக்கு அஞ்சலி செலுத்த கூடாது, என்று கோ பேக் ஸ்டாலின் #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டனர்.

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

மேலும் அதில், இதுவரை ஸ்டாலின் இந்து மதத்துக்கு எதிராக பேசிய கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.. இதை பார்த்த திமுகவினர் பதிலுக்கு #TNwithMKStalin என்று டிரெண்ட்டாக்கி விட்டனர்.. இப்படி மாறி மாறி ட்விட்டரில் ஸ்டாலின்தான் இன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டார்.

 கோ பேக் மோடி

கோ பேக் மோடி

அத்துடன், அரசியலுக்காகவும், வாக்குக்காகவும் இப்படி எல்லாம் அரசியல் செய்வதா என்றும கேட்டும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வழக்கமாக கோ பேக் மோடி தான் டிரெண்டாகும்.. ஆனால் கோ பேக் ஸ்டாலின் அகில இந்திய அளவில் டிரெண்டானது ஆச்சரியமாக உள்ளது.

 டிரெண்டிங்

டிரெண்டிங்

திமுக மீதான இந்துக்களின் எதிர்ப்பு இன்னும் குறையவில்லையா? அல்லது ஒரு சாரார் மட்டுமே தேர்தல் சமயத்தில் இப்படி திமுகக்கு களங்கம் கற்பிக்க இதை டிரெண்டாக்கி வருகிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இந்துக்களின் எதிர்ரப்பு அதிகமாக இருப்பது உண்மையானால், அதை களையும் முயற்சியை திமுக இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தைதான் இது உணர்த்துகிறது.

English summary
GoBackStalin trending in Twitter, DMK rebuts with TNwithMKStalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X