சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போகாத ஊருக்கு வழி சொல்லும் முதல்வர் பழனிச்சாமி .. கோதாவரி- காவிரி இணைப்பு சாத்தியமா?

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் சேர்ந்து இப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் ரூ.60 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் என்று பேசிவருகிறார். இந்த திட்டம் சாத்தியமா? அல்லது ஏமாற்று வேலையா? என்பதை இந்த கட்டுரையை படித்துத் தெரிந்து கொள்வோம்.

இன்று காலை பேப்பரை தொட்டவுடன் முதல்வர் பழனிச்சாமி கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளின் நீர் தேவை பூர்த்தியடையும் எனவும், அந்த திட்டத்தை செயல்படுத்துவதே தங்களின் முதன்மையான நோக்கம் எனவும் போட்டிருந்தார்கள்

இது உண்மையில் சாத்தியமா என்பதை ஆய்வு செய்ய விரும்பினேன். ஆனால் அதன் முடிவுகள் எனக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் அளித்தன. ஏனெனில் அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை

 காவிரி இணைப்பு

காவிரி இணைப்பு

மராட்டிய-சத்தீஸ்கர் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதி ஆற்றில் அணை கட்ட வேண்டும், அதில் தேங்கும் தண்ணீரை தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லவேண்டும். அதன் பின்னர் ஆந்திர மாநிலம் போலாவரம் அணைக்கும், அங்கிருந்து நாகர்ஜூனா சாகர் அணைக்கும் அதன் வழியாக கிருஷ்ணா நதிக்கும் நீரை கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னர் அந்த நீரை சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரிக்கு தண்ணீரைக் கொண்டு செல்வது தான் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் ஆகும். கேட்கவே தலை சுற்றுகிறதா?

 நீளாமான 2வது ஆறு

நீளாமான 2வது ஆறு

சரி விஷயத்துக்கு வருவோம். நாட்டில் காவிரிக்கு பிறகு இரண்டாவது நீளமான நதி என்றால் அது கோதாவரி நதி தான். இந்த கோதாவரி நதி, மஹாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை வளம் கொழிக்க வைத்துவிட்டு, சுமார் 1465 கிலோ மீட்டர் தொலைவு ஓடி ஆந்திராவின் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நதியில் இருந்து ஆண்டுக்கு 3 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது.

உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்குன்னா தக்காளி சட்னியா.. குஷ்பு கோபக் கேள்வி உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்குன்னா தக்காளி சட்னியா.. குஷ்பு கோபக் கேள்வி

 போலாவரம் அணை

போலாவரம் அணை

கிருஷ்ணா நதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தியாகி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, வழியாக வங்க கடலில் சென்று கலக்கிறது. கோதாவரி- கிருஷ்ணா ஆகிய இரண்டு நதிகளையும் இணைக்கும் திட்டம் தான் போலாவரம் திட்டம். இதன் படி ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள போலாவரம் என்ற இடத்தில் பெரிய அணை கட்டப்படுகிறது. இந்த தண்ணீரை, கிருஷ்ணா நதி தேக்கப்படும் நாகர்ஜூனா சாகர் அணைக்கு திருப்புவதே இந்த திட்டம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னரே காவிரிக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த யோசிக்கவாவது முடியும்.

 53 ஆயிரம் கோடி தேவை

53 ஆயிரம் கோடி தேவை

போலாவரம் அணை திட்டத்துக்கு 1.68 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுவரை 1.19 லட்சம் ஏக்கர் நிலத்தை கைப்பற்றி விட்டதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் ஒரு லட்சம் பழங்குடியின குடும்பங்கள் வேறு இடத்துக்கு இடம் பெயர வேண்டியுள்ளது. இதுவரை சுமார் ரூ.14 ஆயிரம் கோடியை ஆந்திரா அரசு செலவு செய்துள்ளது. இந்த திட்டத்தை முடிக்க இன்னும் ரூ.53 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதன் படி போலாவரம் வலது கால்வாய் இணைப்பு மூலம் 80 டிஎம்சி தண்ணீரை கிருஷ்ணா நதிக்கு திருப்பிவிடுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்

 ஒடிசா எதிர்ப்பு

ஒடிசா எதிர்ப்பு

ஆந்திரா இரண்டாக பிரிந்ததில் இருந்து தெலுங்கானா மாநிலம், பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி போலாவரம் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. இதே காரணத்தை கூறி, ஒடிசா அரசும் போலாவரம் திட்டத்தை எதிர்த்து வருகிறது. சத்தீஸ்கர் அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து கொண்டு இருக்கிறது. எனினும் எல்லா எதிர்ப்பையும் தாண்டிதான் போலாவரம் திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்தி வருகிறார்.

 காவிரி இணைப்பு

காவிரி இணைப்பு

போலாவரம் திட்டம் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால், கிருஷ்ணா நதியையும், பெண்ணை ஆற்றையும் இணைக்க வேண்டும். அதன்பிறகு பெண்ணை ஆற்றில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இதன்படி கோதாவரி- கிருஷ்ணா-பெண்ணை-காவிரி இணைப்பு திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி செலவாகும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. நீர் வறண்டு போகாமல் தடுக்க உலோக குழாய்களை பயன்படுத்தி தண்ணீரை கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஆனால் இதுவரை இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை. முதலில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என நான்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

 தப்பிக்கும் கர்நாடகா

தப்பிக்கும் கர்நாடகா

உரிமையோடு கேட்டு வாங்க வேண்டிய தண்ணீரான காவிரியையே தர மறுக்கிறது கர்நாடகா, வெள்ளக்காலங்களில் காவிரியில் தேவைக்கு அதிகமாக தண்ணீரை திறந்துவிட்டு கணக்கு சரியா போச்சு என்று சொல்லி தப்பி வருகிறது. ஆனால் காவிரியில் வரும் தண்ணீரை சேமிக்க பெரிய அளவிலான தடுப்பணைகளை தமிழகத்தில் எங்குமே கடந்த 50 ஆண்டுகளில் கட்டப்படவில்லை. இந்நிலையில் எங்கோ 5 மாநிலங்களுக்கு தள்ளி, ஒடிசா எல்லையில் ஓடும் கோதாவரி தண்ணீர் தமிழகத்து வரும் என்றால் நம்ப முடிகிறதா?

 இணைப்பு சாத்தியமா?

இணைப்பு சாத்தியமா?

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்ட கதையாகத்தான் கேதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உள்ளது. முடியாது என்று சொல்வதாக பொருள் கொள்ள வேண்டாம். இன்றைக்கு பாரதிய ஜனதா மற்றும் அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியே இதைப்பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார். அதாவது இந்த திட்டத்தை பற்றிய தனது அறிக்கையில் போகாத ஊருக்கு வழி என தெளிவாக கூறியிருக்கிறார்.

 அன்புமணி அறிக்கை

அன்புமணி அறிக்கை

கடந்த ஆண்டு (மே 14, 2018), அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெறுவதே சாத்தியமாகாத நிலையில், கேட்பதற்கே தலைசுற்றும் இந்தத் திட்டத்தை தமிழகம் தவிர்த்த 4 மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது சாத்தியமா? என்பதை தமிழ்நாட்டு மக்களும், வேளாண் பெருமக்களும் முடிவு செய்து கொள்ளலாம். குழாய் வழியாக கோதாவரி நீரை கொண்டு வரும் திட்டமும் சாத்தியமாகாது. ஒருவேளை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் கூட கோதாவரி நீர் 3 மாநிலங்களைக் கடந்து தான் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதால், இப்போது கர்நாடகத்துடன் மட்டும் போராடும் தமிழகம், இனி 3 மாநிலங்களுடன் போராட வேண்டியிருக்கும்.

 ஏமாற்ற வேண்டாம்

ஏமாற்ற வேண்டாம்

தென்னிந்திய நதிகள் அனைத்தும் இணைக்கப்படும் போது வேண்டுமானால் கோதாவரி-காவிரி இணைப்பால் தமிழகத்திற்கு பயன்கிடைக்கலாம். அதற்கு முன்பாக இந்த திட்டம் குறித்து பேசுவதெல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவதைப் போன்றதே. இது தமிழகத்தின் நீர் தேவையை நிறைவேற்றாது" என அன்புமணியே சொல்லியிருக்கிறார். மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் இந்த திட்டம் சாத்தியமா என்பதை... காவிரி தண்ணீரை முறையாக பயன்படுத்த திட்டங்களை போடாமால், அழும் பிள்ளைக்கு பக்கத்து தட்டில் வீணாக இருக்கும் பாயாசத்தை எடுத்து தருகிறேன் என்று சொல்லி மத்திய, மாநில அரசுகள் ஏமாற்ற வேண்டாம்.

English summary
cm palaniswami says, we give water from godavari, godavari-cauvery link project possible?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X