சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன? இன்னும் குறையுமா?

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்றுமுன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,850 ரூபாய்க்கும், ஒரு பவுன், 38 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி 64.30 ரூபாயாக இருந்தது. அதேநேரம், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 4,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை, எம்.சி.எக்ஸ்-ல் (பல் பொருள் எக்சேஞ்ச்/சந்தை) தங்கம் மீதான விலை 0.34 சதவீதம் அல்லது ரூ .170 குறைந்து 10 கிராமுக்கு 49,338 ரூபாயாக உள்ளது.

இந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்!! இந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்!!

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி ஒரு கிலோவுக்கு 2.92 சதவீதம் அல்லது ரூ .1,709 குறைந்து ரூ .56,779 ஆக உள்ளது. உள்நாட்டு ஸ்பாட் சந்தையில், நேற்று, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .614 குறைந்து, ரூ .50,750 என்ற விலையில் விற்பனையானது. வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ .1,898 குறைந்து ரூ .59,720 ஆக இருந்தது.

 தங்கத்தின் விலை சரிவு

தங்கத்தின் விலை சரிவு

உலகளாவிய சந்தைகளில், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய கொரோனா பிரச்சினை, பலவீனமடைந்த டாலர் போன்றவற்றால், ஆகஸ்ட் தொடக்கத்தில் தங்கம் விலை, அவுன்ஸ், 2,075 டாலருக்கு மேல் விலையேறி புதிய சாதனை படைத்தது.

டாலர் நிலையாக உள்ளது

டாலர் நிலையாக உள்ளது

ஐரோப்பாவில் தற்போது பொருளாதார மந்தநிலை அறிகுறி நிலவுகிறது. அதேநேரம், 8 வாரங்களுக்கும் மேலாக பிற கரண்சிகளை ஒப்பிட்டால் அமெரிக்க டாலரின் மதிப்பு, நிலையாக உள்ளது.

நல்ல மதிப்பு

நல்ல மதிப்பு

தங்கம் விலை மற்றும் சர்வதேச பொருளாதாரம் குறித்து, கோடக் செக்யூரிட்டீஸ் அமைப்பு கூறுகையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பிரச்சினைகள், மாறி வரும் பொருளாதார புள்ளி விவரங்கள் மற்றும் பிரெக்ஸிட் விஷயத்தில் நிச்சயமற்ற தன்மை, ஐரோப்பிய பொருளாதார நிலை குறித்து அதிகரித்துவரும் சந்தேகங்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மீதான மதிப்பு அதிகரித்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர்


"அமெரிக்க டாலரின் மதிப்பு நன்றாக இருப்பது, தங்க விலையை குறைத்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தம் போன்றவை, தங்கத்தின் மீது முதலீடு செய்வதை பாதுகாப்பாக உணரச் செய்கிறது. எனவே தங்கத்தின் விலை ரொம்பவே குறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அதேநேரம் அமெரிக்க டாலர் நிலையில் ஏதேனும் மாற்றம் வராத வரை, தங்கம் விலை இன்னும் ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. விலை குறையும் போது தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது" என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் மேலும் கூறுகிறது.

English summary
Gold and silver prices in India fell for the fourth day in a row today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X