சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Gold rate: என்ன இது.. தங்கம் விலை இப்படி ஏறிகிட்டே போகுதே.. இனி கடையின் ஷோகேஸில்தான் பார்க்கணும் போல

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 72 உயர்ந்து ரூ 4,975 ஆக விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலையை பார்த்தால் இனி அதை நகைக் கடை ஷோகேஸில் மட்டுமே பார்த்துவிட்டு செல்ல வேண்டியிருக்கும் போல!. அந்த அளவுக்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில் சென்னையில் தினந்தோறும் தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ 4,975 க்கு விற்பனையாகிறது.

நீட் தேர்வு: ஆந்திரா, தெலுங்கானா...உள்பட 5 மாநில முதல்வர்களுக்கு...முக ஸ்டாலின் கடிதம்நீட் தேர்வு: ஆந்திரா, தெலுங்கானா...உள்பட 5 மாநில முதல்வர்களுக்கு...முக ஸ்டாலின் கடிதம்

எவ்வளவு உயர்வு

எவ்வளவு உயர்வு

நேற்று ஒரு கிராம் 4,903 ஆக இருந்தது. இன்று கிராமுக்கு ரூ 72 அதிகரித்துள்ளது. அது போல் நேற்று 39,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்று 576 உயர்ந்து 39,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை

விற்பனை

அது போல் 24 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ 5,148 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ 5,220 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை நேற்று 41,184 க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொல்கத்தா

கொல்கத்தா

இன்று 576 ரூபாய் உயர்ந்து 41,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் மும்பையில் ஒரு கிராம் 5,036 ஆகவும் பெங்களூரில் ஒரு கிராம் ரூ 4904க்கும் கேரளாவில் ரூ 4,785க்கும் ஹைதராபாத்தில் ஒரு கிராம் 4,917க்கும் கொல்கத்தாவில் ரூ 5,023 க்கும் விற்பனையாகிறது.

எவ்வளவு வெள்ளி

எவ்வளவு வெள்ளி

அது போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ 69.80-லிருந்து இன்று ரூ 72.50க்கு உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 72,500க்கு விற்பனையாகிறது. என்னதான் தங்கம், வெள்ளி விலை கூடினாலும் அதன் மீதான மவுசு மக்களிடம் குறையவில்லை என்கிறார்கள் நகைக் கடைக்காரர்கள்.

English summary
Gold price goes hike today in Chennai, Silver price too increased. It gives saddness for Middle class people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X