சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. விலை உயர்வுக்கு ஷாக் காரணம்

Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 336 ரூபாய் உயர்ந்து 29,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு பின்னணியில் சர்வதேச காரணம் உள்ளது.

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே விறுவிறுவென உயர்ந்து வருகிறது. 10 மாதத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது . குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை 3 ஆயிரம் வரை அதிகரித்தது. அதாவது 27 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்தது.

gold price increased in chennai: saudi arabia oil plant attack behind the reason

இந்த வரலாறு காணாத விலை உயர்வா இந்நிலையில் தான் தங்கம் விலை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இறங்கி வந்தது. வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3ஆயிரத்து 612க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 896க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மீண்டும் 28 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 584க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் வாரத்தின் முதல் வேலைநாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் 29 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 29 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது தங்கம் விலை. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.3 ஆயிரத்து 626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக!கட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக!

இன்று வெள்ளி விலை ஒரு கிராம் 48 ரூபாய் 80 பைசாவுகவும், ஒரு கிலோ 48 ஆயிரத்து 800க்கும், ஒரு கிராம் 48 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சவுதியில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் கிணறு மீது கிளர்ச்சி குழுக்கள் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் கிணறு பற்றி எரிந்து வருகிறது. இந்த அச்சம் காரணமாக பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ததால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனிடையே கிளர்ச்சி குழுக்கள் தொடர்ந்து இது போன்று தாக்குதல் நடத்த தொடங்கினால் பெரிய அளவில் பெட்ரோல் விலை உயரும் அபாயமும் உள்ளது.

English summary
gold price increased india today, saudi arabia oil plant attack behind the reason, many invest to gold
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X