சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று இறங்குமுகம்.. இன்று ஏறுமுகம்.. ரோலர்கோஸ்டர் போல் மாறும் விலை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 568 உயர்ந்து சவரன் ரூ 41,336க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் மீதான விலை நாள்தோறும் ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. மண் மீதும் பொன் மீதும் போட்ட முதலீடுகள் என்றும் வீணாவதில்லை என்ற பழமொழிக்கேற்ப மக்கள் அவற்றின் மீது முதலீடுகளை செய்து வருகிறார்கள்.

Gold Price increased today by Rs 71 per gram

இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 568 உயர்ந்து 41 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 71 ரூபாய் உயர்ந்து 5,221 விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 30 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 76,300-க்கு விற்பனையாகிறது.

அது போல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 71 உயர்ந்து ரூ 5,321-க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ 42,568 விற்பனையாகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,210 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு.. தியாக தலைவி சின்னம்மா பேரவையின் உறுப்பினர் அட்டை விநியோகம்சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு.. தியாக தலைவி சின்னம்மா பேரவையின் உறுப்பினர் அட்டை விநியோகம்

நேற்று விலை குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. ஆவணி மாதம் பிறந்த நிலையில் திருமணம் மற்றும் சுப விசேஷங்களுக்கு எப்படி தங்கம் வாங்குவது என தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

English summary
Gold price increased today as Rs 71 per gram. Today one gram of gold to be sold for Rs 5221 (22 carat).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X