சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தம்மாத்தூண்டு மூக்குத்தி இந்த விலையா?.. விக்கிற விலையைப் பார்த்தா?.. மூக்கு குத்தவே பயமா இருக்கே..!

Google Oneindia Tamil News

சென்னை: 1980- களில் பிறந்தவர்கள் 90-களில் போட்ட மூக்குத்திகளின் விலை அதிகபட்சமாக வெறும் ரூ 500தான். அதாவது இதன் எடை 1 கிராமாக இருந்தாலும் இந்த ரேட்தான். ஆனால் இன்று அந்த மூக்குத்தியின் விலை 5000 ரூபாய் ஆகும்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது கொரோனா காலத்தில் தங்கம் குறித்த ஆசைகள் இல்லாமல் மக்கள் உயிர் பயத்துடன் இருக்கும் போது அதன் விலை ஒரு சவரன் 50 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 22 கேரட் என்றால் ரூ 5,014 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது நேற்று முன் தினம் விலையை விட ரூ 1 அதிகமாகும். அது போல் 8 கிராம் தங்கம், அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 40,112 ஆகும். ரூ. 8 விலை உயர்ந்துவிட்டது.

தங்கம் விலை ஐப்பசியில் விலை குறைந்து தை மாதம் மீண்டும் உச்சத்தை தொடும் - பஞ்சாங்கம்தங்கம் விலை ஐப்பசியில் விலை குறைந்து தை மாதம் மீண்டும் உச்சத்தை தொடும் - பஞ்சாங்கம்

ஒரு சவரன்

ஒரு சவரன்

இதே 10 கிராம் தங்கமாக இருந்தால் ரூ 50,140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 5,469 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ 43,752க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கத்தின் விலையோ ரூ 54,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை

நமது பாட்டி, அம்மா காலத்தில் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 300-க்கு விற்பனை செய்யப்பட்டதை அவர்கள் கூறி ஆச்சரியத்துடன் கேட்டுள்ளோம். ஏன் அப்பவே ஒரு 100 சவரன் வாங்கி வைக்கிறதுதானேனு சொல்வோம். அதற்கு அவர்கள் எங்களுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம், இதில் எங்கிருந்து தங்கம் வாங்குறது என்பார்கள். அந்த காலத்தில் ரூ 300-க்கே மக்கள் கஷ்டப்பட்டார்கள்.

1 கிராம் வரை போடுவது வழக்கம்

1 கிராம் வரை போடுவது வழக்கம்

அதன் பின்னர் 1980-களில் 1000- 1500 ரூபாய்க்கு ஒரு சவரன் விற்பனை ஆனது. இதையடுத்து 1990-களில் 2000 என இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தன. பின்னர் 2005-களில் ரூ 5000-த்திற்கு சவரன் விற்பனையானது. பொதுவாக மூக்குத்தி என்றால் 500 மில்லி அதிகபட்சமாக 1 கிராம் வரை போடுவது உண்டு.

Recommended Video

    தங்கத்தின் விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் காரணம்
    செய்கூலி சேதாரம்

    செய்கூலி சேதாரம்

    அந்த சின்னஞ்சிறிய மூக்குத்திகள் 1990-களில் அதிகபட்சமாக செய்கூலி சேதாரம், கல்லிற்கான விலை என சேர்த்து அதிகபட்சமாக ரூ 500-க்கு விற்பனையானது. ஆனால் இன்றோ ஒரு கிராம் அல்லது அரை கிராம் மூக்குத்தியின் விலை 5000 அல்லது 2500 ஆகும். இதனால் மூக்கு குத்துவதற்கே சில பெண்கள் பயப்படுகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

    English summary
    Gold price rate touches the sky day by day. In 1980's nose screws rate was Rs 500 for 1 gram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X