சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேலே எட்டிப் பாருங்க.. தூரமாக தெரிகிறதே அதுதான் தங்கம்.. எட்டாத உயரத்திற்கு சென்ற விலை.. புது உச்சம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை. விலை இன்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன், 40 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீப காலமாகவே, தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உலகம், முழுக்க கொரோனா பாதிப்பால் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவுவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதுவும், விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Gold prices continue to rise in Chennai today as well

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததன் எதிரொலியாக, தங்கம் விலை மளமளவென உயரத் துவங்கியது. இந்த நிலையில்,
இன்று மீண்டும் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. நேற்று 5,013 ரூபாயாக இருந்த ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து 5,037 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வும்.. அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மையும்! தங்கம் விலை உயர்வும்.. அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மையும்!

இதேபோல நேற்று, 40,104 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று மேலும் 192 ரூபாய் உயர்ந்து 40,296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பார் வெள்ளி ஒரு கிலோ இன்று, ஒரே நாளில் 2,000 ரூபாய் உயர்ந்து, 72,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையான கலக்கத்தில் உள்ளனர்.

English summary
Gold prices continue to rise in Chennai. The price has gone up again today, being sold for 40,296 rupees. In recent times, the price of gold has been rising sharply. As the world becomes more volatile due to the impact of the corona, investors have begun to invest in gold. This, too, is seen as the main reason for the rise in prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X