சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. பொருளாதார மந்தநிலை.. தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது

Google Oneindia Tamil News

சென்னை: பொருளாதார மந்தநிலையால் அச்சங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

உலக அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (28 கிராம்) 1525.64 டாலராக சரிந்துள்ளது. அதேநேரம் அமெரிக்காவில் தங்கத்தின் விலை 1533.8 அமெரிக்க டாலராக உயர்ந்து இருந்தது.

Gold prices hit new life-time high as rupee tumbles and economy slowdown

இந்தியாவின் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்த ரூ.29,832க்கு விற்பனையானது.

சென்னையில் இன்று மாலை தங்கம் விலை கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து ரூ. 3729க்கு விற்பனை ஆனது.

இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 38ஆயிரத்து 898 ரூபாய் என்ற அளவுக்கு (0.16 சதவீதம்0 உயர்ந்து விற்பனையானது.

ஆசிரியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவுஆசிரியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு

வெள்ளியின் விலையும் (ரெடிமேட் வெள்ளி0 கிலோ 52 ஆயிரத்து 600 ரூபாய் ஆக உயர்ந்தது. நேற்று 52 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 600 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஜிடிபி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் சரிந்ததாக வெளியான தகவல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை ஒரு அவுன்சுக்கு சர்வதேச சந்தையில் 1,542-1,550 டாலராக உயர வாய்ப்பு இருப்பதாக இந்தியா நிவேஸின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் (28 கிராம்) 1,525 டாலராக உள்ளது.

English summary
Gold prices hit new life-time high as rupee tumbles and economy slowdown. Gold prices are up around 20% so far this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X