சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. 1ம் தேதி தங்கம் வாங்காம விட்டுட்டோமே.. 12 நாளில் நிகழ்ந்த மாற்றம்.. நகை வாங்குவோர் ஷாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏறுமுகத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.30,000 தொட வாய்ப்பு!!

    சென்னை: தங்கம் விலை சவரனுக்கு கடந்த 12 நாளில் மட்டும் 2 ஆயிரத்து 344 ரூபாய் அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 8 மாதத்தில் 4ஆயிரத்து 656 ரூபாய் கூடியுள்ளது. இன்னும் விலை அதிகரிக்கும என்பதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தங்கம் விலை கடந்த மே மாதம் முதல் வேகமாக உயர்ந்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 12 நாளில் மட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

    gold rate changed at 12 days, one pavan gold price hiked to rs 2344

    கடந்த ஒன்றாம் தேதி தங்கத்தின் விலை ரூ.26,480 ஆக இருந்தது. அதன்பிறகு 2ம் தேதி ரூ.27,064, 3ம் தேதி ரூ.27, 328, 5ம் தேதி ரூ.27,680, 6ம் தேதி ரூ.27,784, 8ம் தேதி ரூ.28,464, 9ம் தேதி 28,552க்கும் உயர்ந்தது. கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுகுக்கு ரூ.28,656க்கு உயர்ந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். இதனால் அடுத்த நாளான நேற்று (ஆகஸ்ட் 12) தங்கம் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் 168 அதிகரித்து ரூ28,824க்கு விற்பனையானது.

    கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கடந்த 8 மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 4 ஆயிரத்து 656 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் என்று தங்க நகை விற்பனை வியாபாரிகள் தெரிவித்துளளதால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    gold rate changed at 12 days, one pavan gold price hiked to rs 2344

    சீனா- அமெரிக்கா இடையேயான வர்த்தக பிரச்சனை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, அமெரிக்கா பெடரல் வங்கி வட்டி குறைப்பு, பொருளாதார மந்த நிலை, உள்ளிட்ட காரணங்களாலும், சீனா, ரஷ்யா ஆகியவை தங்கத்தை வாங்கி குவிப்பதாலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனிடையே தங்கத்தை 12 நாளுக்கு முன்பு வாங்காமல் விட்டுவிட்டோமே என நகை வாங்கும் பலர் புலம்பி வருகிறார்கள். தங்கம்விலை 30 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    gold rate changed at 12 days, one pavan gold price hiked to rs 2344, gold buyers shocked over price hike
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X