சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. ஒரே நாளில் 312 ரூபாய் அதிகரிப்பு.. இன்னும் அதிகரிக்குமாம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன தங்கம் விலை 31 ஆயிரத்து 376ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை ஜனவரி 8ம் தேதி ரூ.31176 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது. இந்நிலையில் தங்கம் விலை அதன்பிறகு ஏறுவது கொஞ்சம் இறங்குவது என மாறி மாறி இருந்தது.

கடந்த 25ம் தேத ஒரு சவரன் தங்கம் விலை ரூ.30896க்கும், 27ம் தேதி ரூ.31056க்கும், 28ம் தேதி ரூ.31000க்கும், 29ம் தேதி ரூ.30848க்கும். 30ம் தேதி தங்கம் விலை ரூ.31128க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.31064 விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3883க்கு விற்பனை செய்யப்பட்டது.

11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்கு சந்தை சரிவு ஏன்? நிபுணர்கள் கூறுவது என்ன? 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்கு சந்தை சரிவு ஏன்? நிபுணர்கள் கூறுவது என்ன?

புதிய உச்சம்

புதிய உச்சம்

ஆனால் சனிக்கிழமையான நேற்று (பிப் 1) தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.39 அதிகரித்து. இதன் காரணமாக சவரனுக்கு ரூ.312 அதிகரித்து ஒரு சவரன் ரூ.31376க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு நாளில் தங்கம் விலை ரூ.312 அதிகரித்து இருப்பது தங்கம் வாங்குவோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை நிர்ணயம் செய்யும் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். எனவே இன்றும் தங்கம் விலை நேற்றைய விலையான ரூ.31376க்கே விற்பனை செய்யப்படும். திங்கள்கிழமை தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ஆனால் உற்பத்திக்கான பங்குச்சந்தையில் சனிக்கிழமை ஏற்பட்ட அதிபயங்கர வீழ்ச்சியே தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்கிறார்கள். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள். இப்போது உள்ள சூழலில் தங்கம் விலை மேலும் மேலும் உயரவே வாய்ப்பு உள்ளதாகவே தங்க வியாபாரிகள் சொல்கிறார்கள். இது நகை வாங்குவோரை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கடும் நஷ்டம்

கடும் நஷ்டம்

இதனிடையே பங்குச்சந்தையில் இதுவரை இல்லாத அளவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சனிக்கிழமை அன்று(நேற்று) முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 3.5 லட்சம் கோடி இழப்பை சந்தித்தனர். இது பங்குச்சந்தை வரலாற்றில் மோசமான நாளில் ஒன்றாகும். பங்கு வர்த்தகம் செய்யும் பலரும் ஒரே நாளில் மிகமோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் தங்கம் விலையில் அது மேலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

English summary
gold rate hike over 312 per 8 gram gold with in a day, 8 gram gold price rs 31376
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X