• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையில் இன்று தங்கம் விலை பெரும் சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்

|

சென்னை: புரட்டாசி மாதத்தில் பொதுவாக திருமணங்கள் நடப்பதில்லை. ஐப்பசி மாதத்தில் தான் அடுத்து முகூர்த்தங்கள் இருக்கும். அப்போது திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும். இந்நிலையில் பல மாதங்களாக லாக்டவுனால் தள்ளிப்போன பல திருமணங்கள் இப்போது தான் நடைபெற உள்ளன. இந்த சூழலில் தங்க நகைகள் விலை சரசரவென குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.384 குறைந்தது. இதனால் சவரன் ரூ.38 ஆயிரத்து 400க்கு வந்துள்ளது. வரும் வாரங்களில் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காரணமாக தங்கம் விலை வெறும் ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது

பலாத்காரம் செஞ்சுட்டு அட்வைஸ் பெண்களுக்கா? ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆணாதிக்க சிந்தனை... ராகுல் செம பாய்ச்சல்

பொருளாதாரம் சரிவு

பொருளாதாரம் சரிவு

தங்கம் விலை கடந்த 2019 ஜனவரியில் இருந்ததுடன் ஒப்பிட்டால் வெறும் 22 மாதத்தில் அப்படியே அதன் விலை டபுள் ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பொருளாதார மந்த நிலை மற்றும் கடைசியாக கொரோனா ஆகியவற்றால் இந்தியா உள்பட உலக நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.

 ரூ.43,328க்கு விற்பனை

ரூ.43,328க்கு விற்பனை

தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,328க்கு விற்பனையானது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் இந்தியாவில் ஒரு நாளில் விற்கப்பட்ட அதிகப்பட்ச விலை ஆகும்.. அதன் பிறகு தங்கம் விலை சரசரவென சரிந்தது. அடுத்த இரு மாதங்களில் தங்கம் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 5 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

எவ்வளவு ஏற்ற இறக்கம்

எவ்வளவு ஏற்ற இறக்கம்

உச்சபட்சமாக கடந்த செப்டம்பர் 28ம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 37920க்கு விற்பனை ஆனது. ஆனால் அடுத்த நாளே சுமார் 600 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 38500ஐ தொட்டது. அதன்பிறகு கொஞ்சம் ஏறுவது பின்னர் இறங்குவதுமாக உள்ளது, 300 முதல் 400 ரூபாய் வரை ஏற்ற இறக்கங்களை தங்கம் தினசரி சந்தித்து வருகிறது.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று 4,850 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் விலை 38 ஆயிரத்து 800 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.384 சரிந்து தற்போது ரூ.38416க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 48 ரூபாய் சரிந்து 4802 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை சரிவால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இன்று வெள்ளி விலை

இன்று வெள்ளி விலை

இதனிடையே தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு நேற்று 64 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையானது. ஆனால் இன்று 600 ரூபாய் சரிந்து 64 ஆயிரத்து 100 ரூபாயாக விற்பனையாகிறது

 
 
 
English summary
Gold prices have been falling steadily over the past few days. today in a single day, 22 carat gold 8 gram fell by Rs 384 and come to Rs.38416. However, jewelers said that the price of gold is likely to fall further.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X