சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே வாரத்தில் 2 முறை ஏற்பட்ட சூப்பர் மாற்றம்.. தங்கம் வாங்குபவர்களை உற்சாகப்படுத்தும் ஐப்பசி!

Google Oneindia Tamil News

சென்னை: ஐப்பசி மாதம் பிறந்து முகூர்த்தங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கிய நேரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அளவுக்கு தங்கம் விலை 1600 வரை குறைந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த சனிக்கிழமை மட்டும் சவரனுக்கு ரூ.1464 குறைந்த காரணத்தால் ஒரு சவரன் ரூ.37,440 ஆக விற்பனையானது. ஆனால் நேற்று தங்கம் விலை 272 ரூபாய் சவரனுக்கு அதிகரித்து ரூ.37,672 ஆக உயர்ந்தது.

அமெரிக்க தேர்தல் நெருங்கி வருவதால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சிறிது ஏறுவதும் பெரிய அளவில் இறங்குவதுமாக உள்ளது. தங்கத்தின் விலையில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்க அமெரிக்க தேர்தல் முக்கிய காரணம் ஆகும்.

அத்வானிக்கு ரத யாத்திரை.. முருகனுக்கு வேல் யாத்திரை.. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வழி பிறக்குமா?! அத்வானிக்கு ரத யாத்திரை.. முருகனுக்கு வேல் யாத்திரை.. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வழி பிறக்குமா?!

தங்கம் விலை ஏற்றம் ஏன்

தங்கம் விலை ஏற்றம் ஏன்

தங்கம் விலை அதிகரிக்கவோ , குறைவயோ முக்கிய காரணமாக அமெரிக்கா காரணமாக உள்ளது. இதேபோல் பொருளாதார மந்த நிலையும் காரணமாக உள்ளது. எனினும் மந்த நிலை காரணமாக தங்கம் விலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்துள்ளது. ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு அதிகரித்தது.

 ரூ.43,328க்கு விற்பனை

ரூ.43,328க்கு விற்பனை

வரலாற்றில் இல்லாத அளவாக ஆகஸ்ட் 7ம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.43,328க்கு விற்பனை செய்யப்பபட்டது. அதன் பிறகு தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்தது. அடுத்த இரு மாதங்களில் தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 5 ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது.

தங்கம் விலை குறைந்து

தங்கம் விலை குறைந்து

.கடந்த 13ம் தேதி 22 கேரட் ஆபாரண தங்கம் ஒரு கிராம் 4,885 ரூபாய்க்கும், சவரன் 39080க்கும் விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக குறையத் தொடங்கிய தங்கம் விலை வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு ₹33 அதிகரித்து ஒரு கிராம் 4,863க்கும், சவரனுக்கு 264 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38904க்கு விற்பனையானது.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஐப்பசி பிறந்தது. அன்று காலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது. கிராமுக்கு 183 குறைந்து ஒரு கிராம் 4,680க்கும், சவரனுக்கு ரூ. 1464 குறைந்து ஒரு சவரன் 37,440க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை 272 ரூபாய் சவரனுக்கு அதிகரித்து ரூ.37672 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்தது. இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.37,464க்கு விற்பனையானது. சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,683க்கு விற்பனையானது.

இன்று வெள்ளி விலை

இன்று வெள்ளி விலை

இதனிடையே தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை நேற்று ஒரு கிலோவுக்கு 66700 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 400 ரூபாய் குறைந்து ரூ.66300க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி சென்னையில் 30 பைசா குறைந்து 66.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அருமையான வாய்ப்பு

அருமையான வாய்ப்பு

அமெரிக்க தேர்தல் காரணமாக தங்கம் விலை சரிந்து வருகிறது.. தேர்தலுக்கு பின்னர் பொருளாதார கொள்கையில் பெருமளவு மாற்றம் வர வாய்ப்புள்ளதால் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பு என்கிறார்கள் நிபுணர்கள்.

English summary
Gold prices have been falling steadily over yesterday. today in a single day, 22 carat gold 8 gram fell by Rs 208 and come to Rs.37,464. However, This is a good opportunity to invest in gold at this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X