சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா? சகோதரர் சுப்பிரமணி விளக்கம்!

கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றார் கோமதி மாரிமுத்து.

Gomathi Marimuthu has not failed in Anti Dope Test says her brother

இவருக்கு 30 வயதாகிறது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்ததை அடுத்து இவர் தங்கம் வென்றார். இவர் பதக்கம் வென்றதை அடுத்து இந்தியா முழுக்க வைரலானார்.

திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற குக்கிராத்தை சேர்த்தவர். மிகவும் வறுமையான சூழலை சேர்ந்த இவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக, தகவல்கள் வெளியானது.

இவர் முறைகேடாக ஊக்கமருத்து பயன்படுத்தினார். அதனால் இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்திகள் வதந்தி என்று மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோமதி மாரிமுத்தை சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. கோமதி மாரிமுத்து ஊக்குமருந்து பயன்படுத்தியதே இல்லை. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எந்த வித தகவல்களும் வரவில்லை, என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Athlete Gomathi Marimuthu has not failed in Anti Dope Test says her brother. Athlete Gomathi Marimuthu has not failed in Anti Dope Test says her brother.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X