சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் ஒரு மாசம்தான்.. சென்னை அண்ணாசாலையில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை அண்ணாசாலையில் செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி- வீடியோ

    சென்னை: இன்னும் ஒரு மாதத்தில் சென்னை அண்ணா சாலை தனது பழைய இயல்பு நிலையை அடையப் போகிறது. அதன்பிறகு வாகன ஓட்டிகள் சுற்றிச்செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

    சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் ஒரு மாதத்தில் அச்சாலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளது.

    good news for chennai people chennai anna salai will fully open next month

    சென்னையில் கடந்த 2009ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் இரண்டு பிரிவுகளாக நடந்தது. விமான நிலையம் தொடங்கி வண்ணாரப்பேட்டை வரையில் ஒரு பிரிவாகவும், சென்ட்ரல் தொடங்கி பரங்கிமலை வரை ஒரு பிரிவாகவும் பணிகள் நடைபெற்றது.

    இதில் கோயம்பேடு முதல் விமானநிலையம் வரையிலும், கோயம்பேடு முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும் பணிகள் பணிகள் முடிந்து சேவைகள் தொடங்கின. இதற்கிடையே , 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அண்ணா சாலையில் எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, அண்ணா மேம்பாலம், டி.எம்.எஸ்., நந்தனம் ஆகிய இடங்களில் பணிகள் நடந்து வந்தது.. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதற்காக ஒருவழிப்பாதையாக அண்ணா சாலை மாற்றப்பட்டது.

    இதன் காரணமாக அண்ணா சிலையில் இருந்து ஜெமினி நோக்கிச் செல்லும் பாதை மூடப்பட்டு, ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் ஒயிட்ஸ் சாலை, சத்யம் திரையரங்கம் வழியாக அண்ணா சாலைக்குச் செல்ல வேண்டி இருந்தது. தற்போது அண்ணாசாலையில் பணிகள் முடிந்துள்ளது. இதன் காரணமாக இன்னும் ஒரு மாதத்தில் அண்ணா சாலை முழுவதும் இரு வழிச்சாலையாக மாற்றப்படது. இதனால் அண்ணாசாலை வாகன ஓட்டிகள் இனி வழக்கம் போல் செல்ல முடியும். எந்த சாலையையும் இனி சுற்றி செல்ல வேண்டியதிருக்காது.

    English summary
    good news for chennai people who drive in anna salai, chennai anna salai will fully open next month after sevan years over metro rail work
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X