சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களா.. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. டிசம்பரில் பட்டா மேளாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெடாங்கி வைக்கிறார். அதேநேரம் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். அந்த வகையில் அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்நிலையில் அடுத்த அதிரடியாக ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளது. . டிசம்பரில் பட்டா மேளாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெடாங்கி வைக்கிறார்.

மக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை மக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை

கலெக்டர்களுக்கு கடிதம்

கலெக்டர்களுக்கு கடிதம்

தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் வசிப்போர்கள் அங்கிருந்து வெளியேற்றும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், தற்போது ஆட்சேபனை இல்லாத புறம்போக்கும் நிலங்கள், ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் என வரன்முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பட்டியல் தயார்

பட்டியல் தயார்

இது தொடர்பாக வருவாய்த்துறை கள அலுவலர்கள் மாநராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் கிராம பஞ்சாயத்துக்குளில் ஆட்பேசனை இல்லாத புறம்போக்கு மற்றும் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பட்டியல் விவரங்கள் தமிழ் நிலம் என்கிற மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 4,09,676 இனங்கள்

4,09,676 இனங்கள்

இதன்படி ,ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் மாவட்ட அளவில் வரன்முறைப்படுத்துவது 1,39,200 இனங்களும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வரன்முறைப்படுத்துவது 33,713 இனங்களும், சிறப்பு ஆணைகள் மூலம் வரன்முறைப்படுத்துவது 44,772 இனங்களும், ஆட்சேபனை உள்ள நீர்வரத்து கால்வாய், வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு 1,48,469 இனங்கள், ஆட்பேசனை உள்ள நீர்நிலையில் ஆக்கிரமிப்புகள் 25,396 என மொத்தம் 4,09,676 இனங்கள் உள்ளன.

புறம்போக்கு நிலங்கள்

புறம்போக்கு நிலங்கள்

இதில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் வரன்முறை செய்யப்படுகிறது. இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கும் நடைமுறைகளை நவம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். டிசம்பரில் பட்டா வழங்கும் மேளாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மாற்று இடம் ஒதுக்கப்படும்

மாற்று இடம் ஒதுக்கப்படும்

மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கும் மேளாவை நடத்தி முடித்தல் வேண்டும். இந்த புறம்போக்கு நிலங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆட்சேபகரமான நிலங்களாக இருந்தால் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் ஒதுக்கப்படும்" இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

English summary
Patta is to be issued to the occupants of outlying lands without objection. Chief Minister Edappadi Palanisamy will inaugurate the Patta Mela in December. At the same time alternative accommodation is to be provided to the occupants of the objectionable outlying lands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X