சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை மறுநாள் முதல் சென்னை தி.நகரில் புது பார்க்கிங்.. வெளியானது கட்டண விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: நாளை மறுநாள் முதல் சென்னை தி.நகர் பல் அடுக்கு வாகன நிறுத்தம் பயன்பாட்டுக்கு வருகிறது காருக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Chennai T Nagar Multilevel Car Parking | Oneindia Tamil

    சென்னை தியாகராய சாலை பாண்டி பஜார் பல்லாயிரம் மக்கள் தினசரி வந்து செல்லும் சாலையாகும். அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இன்று வரை இல்லை. வாகனங்கள் பாண்டி பஜார் சாலையின் வாகனப் பாதையில் நிறுத்தப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனை தவிர்க்கும் வகையில், தியாகராய சாலையில் மண்டலம்-10, வார்டு-136-ல் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் சென்னை மாநகராட்சி சார்பில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    பாண்டிபஜார்

    பாண்டிபஜார்

    2017-ம் ஆண்டு முதல் அதிகாரிகளை நியமித்து வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பல அடுக்கு வாகன நிறுத்தம் 1,488 ச.மீ (16,146 ச.அ) பரப்பளவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான. இங்கு ஏற்கனவே பாழடைந்த நிலையில் இருந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் மின் சாதன கிடங்கு இடிக்கப்பட்டு, பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    பணிகள் தொடக்கம்

    பணிகள் தொடக்கம்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டுமான பணி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அமைச்சர் வேலுமணி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். இந்த பல அடுக்கு வாகன நிறுத்தத்தில் 2 கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது.

    எவ்வளவு வாகனங்கள்

    எவ்வளவு வாகனங்கள்

    2 கீழ்தளத்தில் தோராயமாக 550 இருசக்கர வாகனமும், தரைத்தளம் மற்றும் 6 மேல்தளத்தில் 250 நான்கு சக்கர வாகன நிறுத்த முடியும் முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், பேரிடர்களை சமாளிக்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பார்க்கிங் கட்டணம்

    பார்க்கிங் கட்டணம்

    16146 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வாகன நிறுத்தம் கட்டும் பணி கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த பல் அடுக்கு வாகன நிறுத்தத்ததை நேற்று தமிழக முதல்வர் எட்ப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்படி வரும் வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.20, இருசக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    The multi-storey car park in Thiyagaraya Nagar, Chennai will start from 26th. The fare is 20 rupees for a car and 5 rupees for a two wheeler.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X