• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆமா.. சீனியர்களுக்கு நாங்க என்ன அடிமையா".. செம கடுப்பில் திமுக இளைஞர்கள்.. ஆட்டம் காணும் அடித்தளம்!

|

சென்னை: திமுகவின் சீனியர்களால் அக்கட்சியின் அடித்தளமே ஆட்டம் காணும் அவல நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதாம். பல மாவட்டங்களிலும் சீனியர்களுக்கு எதிராக கொதித்தெழுந்து கிளம்ப இளம் படையினர் தயாராகி வருகிறார்களாம்.

கடந்த முறை திமுக ஆட்சியை பிடித்திருக்க வேண்டிய நிலையில், அது ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது.. காரணம் தேவையே இல்லாமல் பல சீனியர்களுக்கும் கட்சி மேலிடம் வெண் சாமரம் வீசியதால். பல இளைஞர்கள் இதனால் வாய்ப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டனர்.

இன்று வரை அவர்கள் கொதிப்பில்தான் இருந்து வருகின்றனர். இதனால்தான் 10 வருஷம் ஆட்சியில் இல்லாத நிலையில், இந்த முறை விட்டதை பிடிக்க பெரும்பாடு பட்டு வருகிறது.

சசிகலா + சீமான்.. "இது"தான் பிளான்.. இப்படித்தான் நடக்க போகிறது.. எப்படி சமாளிக்க போகிறது அதிமுக

 ஐபேக் டீம்

ஐபேக் டீம்

இதற்காகவே ஐபேக் டீமை வடநாட்டில் இருந்து அழைத்து வந்து களமிறக்கி விட்டுள்ளது.. அந்த டீம் என்ன வேலை செய்கிறது என்றே தெரியவில்லை. சினிமாத்தனமாக அவர்கள் செய்து வரும் வேலைகளைப் பார்த்து கட்சியின் அடித்தள தொண்டர்கள் கடுப்பாக இருக்கிறார்களாம். ஸ்டாலினை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு இந்த டீம் செயல்படுவதால் கட்சிக்காக உதிரம் சிந்தி வேலை பார்ப்போரை இந்த டீம் கண்டு கொள்வதே இல்லையாம். கிட்டத்தட்ட நம்ம விளம்பரங்கள் மட்டும் போதும் இவர்கள் எல்லாம் தேவையில்லா என்பது போல நடந்து கொள்கிறார்களாம்.

பிளான்கள்

பிளான்கள்

இதுவரை போட்டு தந்த திட்டங்களில் பல பிளான்கள் சக்சஸ்தான்.. ஆனாலும், அதையும் தாண்டி ஒலிக்கும் அதிருப்தி குரல்கள் திமுகவில் எழுந்தபடியே உள்ளன.. ஐபேக் டீம் நடவடிக்கையால் சீனியர்கள், மாவட்ட செயலாளர்கள் அப்செட் ஆவதாக கூறப்படுகிறது.. அவர்களுக்கான முக்கித்துவம் குறைந்து வருவதாக கருதப்படுகிறது.. அதேசமயம் அவர்களை விட கட்சியின் இளம் தலைமுறையினர்தான் மிகப் பெரிய கடுப்பில் உள்ளனராம்.

 ரிப்போர்ட்

ரிப்போர்ட்

தொகுதி வாரியாக ஒரு சர்வே எடுத்து தலைமையிடம் ரிப்போர்ட் தந்துள்ளது இந்த டீம்.. அதாவது தொகுதிக்கு 3 பேர் வீதம் ஒரு வேட்பாளர் லிஸ்ட்டும் தந்துள்ளது.. இந்த குழுவின் வேலை என்னவென்றால், சம்பந்தப்பட்ட தொகுதிக்குள் அனைத்தையும் திமுகவினர் செய்து வருகிறார்களா? அறிவித்த போராட்டங்களை முறைப்படி நடத்தினார்களா? அதில் நிர்வாகிகள் எல்லாருமே தவறாமல் கலந்து கொண்டார்களா? போன்றவை கவனிக்கப்படுகிறதாம்.

டீம்

டீம்

ஒருவேளை இதில் யாராவது செயல்பாடு இன்றி காணப்பட்டால், உடனே தலைமைக்கு கம்ப்ளைண்ட் பறந்துவிடுகிறதாம். இதையெல்லாம் பார்த்துதான் சில சீனியர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.. இவ்வளவு காலம் கட்சிக்காக பாடுபட்டிருக்கிறோம்.. மாவட்டங்களில் கட்சியை வளர்த்திருக்கிறோம்.. இப்போது திடீரென ஒரு டீம் உள்ளே இறங்கி எல்லாவற்றிலும் தலையிடுகிறதே என்ற ஆதங்கம் மெல்ல எழுந்துள்ளது.. அதுமட்டுமில்லை.. விசுவாசம், களப்பணிகளில் யாரும் சொல்லாமலேயே நாங்களாகவே இறங்கி வேலை பார்த்து வந்த நிலையில், தங்களை இப்படி ஒரு குழு கண்காணிப்பதையும் ஏற்க முடியவில்லை என்ற பொருமலும் எழுந்து வருகிறாம்.

 சீனியர்கள்

சீனியர்கள்

கட்சியின் சீனியர்கள் என்பதை முன்வைத்து ஒருசிலர் ஒவ்வொரு முறையும் சீட் வாங்குகிறார்கள் என்பதற்காக மொத்த பேரையும் சந்தேகப்படுவது சரியல்ல என்ற முணுமுணுப்புகளும் எழ ஆரம்பித்துள்ளனவாம்.. இப்போதே மாவட்டங்களில் சீட் கேட்டு பிரச்சினைகள் வெடிக்க துவங்கி உள்ள நிலையில், இளைஞர்கள் மறுபக்கம் நமக்கு இந்த முறையும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற வேதனையிலும் கொதிப்பிலும் உள்லனராம். ஐபேக் டீம் எடுத்து வரும் அதிரடியால் இன்னும் என்னென்ன குழப்பங்கள் எழ போகிறதோ தெரியவில்லை.

 
 
 
English summary
Good strategy and Master plans of DMK, TN Assembly Election 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X