• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

குடுகுடுப்பைகாரர்கள் வராதது ஏன் தெரியுமா? "இவர்கள்" இருக்கும் வரை நல்ல காலம் பிறக்காது - சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக நாட்டை ஆளும் வரை இனி எப்போதும் நல்லகாலம் பிறக்காது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய அரசியலை முன்னிருத்தி அரசியல் செய்து வரும் நாம் தமிழர் கட்சி பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய 4 கட்சிகளையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

Good times are not born as long as Bjp, Congress, DMK, ADMK in rule - Naam Tamilar co ordinator Seeman

பொதுக்கூட்டங்கள் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை கடும் விமர்சனங்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி மூத்த நிர்வாகிகள், பேச்சாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக ட்விட்டரில் அரசியல் நையாண்டி பதிவுகளை சீமான் வெளியிட்டு வருகிறார். இன்று சீமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணா..! என்னப்பா..? முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குதுன்னு பூம் பூம் மாட்டோட குடுகுடுப்பை அடிப்பாங்களே. இப்பெல்லாம் ஏன் அண்ணா அவங்கெல்லாம் வர்றதில்லை. அதுவா தம்பி.., பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு கட்சியும் இந்தநாட்டை ஆள்கிறவரை இனி எப்பவும் நல்ல காலம் பிறக்காதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சுப்பா... அதனால வர்றதில்லை தம்பி!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இன்று நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தொடர்பாக பதிவிட்டுள்ள சீமான், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்... படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!" என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த சில நாட்களுக்குமுன் "குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் போதை பொருட்களென்றால், 'டாஸ்மாக்கில்' தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா? போதை பொருட்களில் சிலவற்றுக்கு தண்டனையும், சிலவற்றை அரசே விற்பதும் தான் திராவிட மாடலா?" என சீமான் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதேபோல் மின் தடை குறித்தும் ட்விட்டரில் நையாண்டி பதிவை சீமான் வெளியிட்டு இருந்தார். அதில் "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..! மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு!அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!" எனப் பதிவிட்டு இருந்தார்.

English summary
Good times are not born as long as Bjp, Congress, DMK, ADMK in rule - Seeman: பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக நாட்டை ஆளும் வரை இனி எப்போதும் நல்லகாலம் பிறக்காது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X