சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்களிக்கும் இந்தியா.. டூடுள் போட்டு ஹானர் செய்த கூகுள்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் புதிய மக்களவையை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி நிலையில் வாக்களிப்பது எப்படி என்று கூகுள் இணையதளம் டூடுள் போட்டு அசத்தியுள்ளது.

இந்தியாவில் அடுத்த மக்களவைக்கான தேர்தல் இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக இன்று தொடங்கியுள்ள வாக்குப் பதிவு நிகழ்வில் இரண்டாம் கட்டமாக தமிழகம் வாக்களிக்க உள்ளது. 7 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு மே மாதம் 19 -ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23 ம் தேதியும் நடைபெறவுள்ளது.

Google comes up with Doodle on Elections

வாழ்க்கையிலேயே மோசமான நாள்.. எனக்கே ஓட்டு இல்லை.. அப்படியே ஷாக் ஆன அப்பல்லோ ரெட்டி மகள்! வாழ்க்கையிலேயே மோசமான நாள்.. எனக்கே ஓட்டு இல்லை.. அப்படியே ஷாக் ஆன அப்பல்லோ ரெட்டி மகள்!

இந்த நிலையில் இன்று கூகுள் வெளியிட்டுள்ள டூடுளில் எப்படி வாக்களிப்பது, வாக்குச்சாவடியில் நடைபெறும் நிகழ்வுகள், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், வாக்குச்சாவடியை அடையாளம் காண்பது எப்படி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது, வாக்குப் பதிவுக்கான அடையாள அட்டை, தேர்தல்கள் எப்போது நடைபெறுகிறது என்று மொத்தம் 8 தலைப்புகளில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதில் வாக்குச்சாவடியில் நடைபெறும் நிகழ்வுகளாக தொகுத்திருப்பதில், வாக்குச்சாவடி அதிகாரிகள் முதலில் உங்களது பெயரை வாக்காளர் பட்டியலிலும், உங்களது வாக்காளர் அடையாள அட்டையிலும் சரிபார்ப்பார்கள், இரண்டாவதாக உங்கள் விரலில் அதிகாரிகள் மை வைப்பார்கள், அதனை தொடர்ந்து உங்களது கையெழுத்தை பெற்றுக் கொள்ளும் அவர்கள் உங்களுக்கு ஒரு சீட்டை கொடுப்பார்கள்.

இதனையடுத்து இந்த சீட்டை மூன்றாவது வாக்குச் சாவடி அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும், அவர் உங்கள் கையில் மை வைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிடுவார். அதன்பின்னர் நீங்கள் வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் அனுமதிக்கப் படுவீர்கள். பின்னர் அந்த இயந்திரத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவரது பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும்.

அப்போது ஒரு பீப் ஒலி கேட்கும். பின்னர் நீங்கள் வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு வரும். அதில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண் மற்றும் சின்னம் ஆகியவை இடம்பெற்றிருக்கும் வேட்பாளர்களில் யாரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது

அதோடு இது குறித்த அதிக விவரங்களுக்கு தேர்தல் ஆணைய இணையதளத்தை பார்க்கலாம் என்று தேர்தல் ஆணைய இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு செல்போன், கேமரா போன்ற பொருள்களை பயன்படுத்த கூடாது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் பின்பற்ற வேண்டியவை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடுகள், எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது இணையதளத்திலேயே வசிக்கும் புதிய வாக்காளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை

English summary
As the nation is casting its votes to elect the New parliament, Google has come up with a Doodle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X