சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

50 ஆண்டுகால போராட்டம்.. தன்பாலின சேர்க்கைக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

Google Oneindia Tamil News

சென்னை: தன்பாலின சேர்க்கைக்கான அங்கீகாரம் என்பது சமூகத்தின் 50 ஆண்டுகால போராட்டம் என்று கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

கூகுள் சில சிறப்பு நிகழ்வுகள், மனிதர்கள், நாட்கள் என்று பல்வேறு சிறப்புகளை டூடுல் மூலம் மேலும் சிறப்பாக்கி வருகிறது. கூகுள் ஏதாவது ஒன்றுக்கு டூடுல் வெளியிடுகிறது என்றால் அதற்கு ஏதேனும் சிறப்புகள் இருக்கும் என்று அதனை குறித்த தேடுதல்கள் கூகுளில் அதிகரிக்கிறது.

Google published doodle for same gender relationship recognition

நேற்று தனபாலின சேர்க்கையாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்த டூடுள் ஒன்றை வெளியிட்டது கூகுள். தன்பாலின உறவு இந்தியாவில் குற்றமில்லை என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது.

இருந்தாலும் சமூகத்தில் இவர்களுக்கான முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தனபாலின சேர்க்கையாளர்கள் கூறும் குற்றசாட்டு. தனபாலின சேர்க்கையை சிலர் மத ரீதியாக இது கடவுளுக்கு எதிரானது என்று கூறுவோரும் உண்டு.

இந்தியாவில் தன்பாலின உறவுக்கு அனுமதி கிடைத்தாலும் பல்வேறு நாடுகளில் இது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் தன்பாலின உறவுக்கு அனுமதி அளித்துள்ளன.

Google published doodle for same gender relationship recognition

இருப்பினும் 167 நாடுகளில் இது குற்றமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் 50 ஆண்டுகாலமாக தன்பாலின சேர்க்கை சமூகம் கடந்து வந்த பாதையும், போராட்டங்களையும் விவரிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தந்து முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது.

முதன்முதலாக 1969ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கிய இந்த போராட்டம், தற்போது 50-வது ஆண்டை எட்டியுள்ளது. இதனால் தன்பாலின சேர்க்கை சமூகத்தினர் ஜூன் மாதத்தை பெருமையான மாதமாக கருதுகின்றனர். இதை மிகவும் அழகாக கூகுள் டூடுள் மூலமாக காட்சிப் படுத்தியது.

English summary
Google published doodle for same gender relationship recognition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X