சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2021 ஜூன் வரை ஆபிஸ்க்கு வராதீங்க வீட்ல இருந்து வேலை பாருங்க - ஊழியர்களுக்கு கூகுள் உத்தரவு

ஆபிஸுக்கு எல்லாம் வரவேண்டாம் 2021 ஜூன் வரைக்குமே வீட்ல இருந்த வேலை பாருங்க என்று கூகுள் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆபிஸ் போய் வேலை செய்த பலரும் ஒர்க் ப்ரம் ஹோம் மனநிலைக்கு மாறி விட்டனர். இந்த கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் உலகம் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் கூகுள் நிறுவனம் தனது அலுவலக ஊழியர்களை 2021 ஜூன் மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு 1.70 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 1 கோடி பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தாலும் கொரோனா பற்றிய அச்சம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆறாம் கட்டமாக இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் கொரோனா தனிமை முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதால் கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கும் என்றே சொல்ல முடியாத நிலை நீடிக்கிறது.

பாரிக்கர் அவர்களே! உங்கள் கனவு நனவாகியது.. ரஃபேல் விமானங்கள் வந்துவிட்டன.. வரவேற்க நீங்கள் எங்கே?பாரிக்கர் அவர்களே! உங்கள் கனவு நனவாகியது.. ரஃபேல் விமானங்கள் வந்துவிட்டன.. வரவேற்க நீங்கள் எங்கே?

ஒர்க் ப்ரம் ஹோம்

ஒர்க் ப்ரம் ஹோம்

லாக்டவுன் காலத்தில் ஐடி நிறுவனங்களும், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், கூகுள் ஆல்பபெட் நிறுவனத்தின் ஊழியர்கள் இந்தாண்டு முழுவதும் வீட்டிலிருந்தே பணியாற்ற கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி அளித்தது.

ஆபிஸ் வேலை மாறிப்போச்சே

ஆபிஸ் வேலை மாறிப்போச்சே

இதனையடுத்து பலருக்கும் காலையில் எழுந்து அவசரம் அவசரமாக கிளம்பி பஸ் பிடித்து ஆபிஸ் போன காலம் எல்லாம் மறந்து போய்விட்டது. ஆண்கள் லுங்கி பனியனோடும், பெண்கள் நைட்டியோடும் ஆபிஸ் வேலையை வீட்டில் இருந்தே பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

வீட்டு வேலையோடு ஆபிஸ் வேலை

வீட்டு வேலையோடு ஆபிஸ் வேலை

வீட்டு வேலை பார்த்துக்கொண்டே ஆபிஸ் வேலையும்,ஆபிஸ் வேலை செய்து கொண்டே வீட்டு வேலையும் செய்து பழகிவிட்டது. இனி லாக்டவுன் முடிந்தாலும் பலரும் ஆபிஸ் போவார்களா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் வேலை செய்பவர்கள் இந்த ஒர்க் ப்ரம் ஹோம் மூடுக்கு மாறி விட்டனர்.

2021 ஜூன் வரைக்கும் ஆபீஸ் வராதீங்க

2021 ஜூன் வரைக்கும் ஆபீஸ் வராதீங்க

இந்த சூழ்நிலையில்தான் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்கள் புதிய மெயில் ஒன்றை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றும் காலத்தை வரும் 2021ஆம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

English summary
Google employees will work from home until at least summer 2021 employees back to the office until July 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X