சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் நடந்தது இதுதான்! இனி நடக்கப் போவதும் இதுவே... தலைவர் அறிக்கையின் பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய கட்சிகள் ஒன்றில் தமது கட்சியை இணைக்கப்போவதாக வெளியான செய்திகளை அவசரமாக மறுத்து தலைவர் ஒருவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன்பின்னணி குறித்து நாம் விசாரித்தபோது ஏராளமான சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.

பிற மாநிலங்களைப் போல எதிரி தேசிய கட்சியை உடைத்து காணாமல் போக செய்துவிட வேண்டும் என்பதுதான் அந்த கட்சியின் கணக்கு. இதற்காக ஆஸ்திரேலியா தொடர்புடைய குழுமம் களத்தில் இறங்கியது.

Gossip on TN Politics

அவர்கள் நினைத்தபடியே தேசிய கட்சி உடைந்தது. பிரமாண்ட மாநாட்டையும் கூட அந்த தலைவர் நடத்தினார். இதற்கும் கூட அந்த குழுமமே நிதி உதவி செய்ததாம். இதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல எங்கள் கட்சியில் ஐக்கியமாகுங்கள்.. நீங்கள்தான் சி.எம். வேட்பாளர் என தூண்டில் போட்டுப் பார்த்தார்கள்.

அதே கால கட்டத்தில் தலைவர் ஒன்றும் அப்படி சொல்லும்படியாக பிரகாசமாகவும் ஜொலிக்கவும் இல்லை. அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் ஜூட் விட்டுவிட்டனர். இதனால் உடைத்தவர்கள் நம்பிக்கைதான் உடைந்து போனது.

இருந்தாலும் எதற்கும் நம்முடன் இருக்கட்டும் என ஒரு கணக்குப் போட்டு வைத்தது உடைத்த கட்சி. அது கொடுத்த நெருக்கடியின்படியே லோக்சபா தேர்தலிலும் செல்லப் பிள்ளையாக தலைவர் நடந்து கொண்டார்.

எங்க ஆட்சி அவ்வளவு சீக்கிரம் கவிழாது.. பகல் கனவு காணாதீங்க.. எடியூரப்பாவிற்கு ஜேடிஎஸ் பதிலடி எங்க ஆட்சி அவ்வளவு சீக்கிரம் கவிழாது.. பகல் கனவு காணாதீங்க.. எடியூரப்பாவிற்கு ஜேடிஎஸ் பதிலடி

இந்நிலையில்தான் தம்மால் இனி தனியே செலவு செய்ய முடியாது என்கிற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார் தலைவர். ஏனெனில் வீட்டில் அப்படி ஒரு நெருக்கடி. எத்தனை காலத்துக்கு இவர் ஒருவர் மட்டுமே செலவு செய்வது? பேசாமல் கட்சியையே கலைத்துவிட்டு ஏதேனும் ஒரு ஜோதியில் ஐக்கியமாகிவிடுங்கள் என கிச்சன் கேபினெட் தடாலடி காட்டிவிட்டதாம்.

இதில் நொந்துபோன தலைவர் சரி நிதி திரட்டும் வேலையை செய்வோம் என களத்தில் இறங்கியிருக்கிறார். இதற்காக டெல்லி சென்று தமக்கு வேண்டிய இரண்டு தேசிய கட்சி பிரமுகர்களையும் சந்தித்து பேசியிருக்கிறார். ஆனால் ஒரு கட்சி பிரமுகர்களை சந்தித்து மட்டும் செய்தியாக வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

இதனால்தான் தலைவர் வேறுவழியே இல்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டாராம். ஆனாலும் அந்த தலைவர் 2 வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறாராம்.

ஒன்று நாட்டின் பிரதான பதவியில் இருக்கும் மூத்தவர் ஓய்வு காலத்தில் 'அந்த' கட்சிக்குப் போனாலும், வருவேன் வருவேன் என பூச்சாண்டி காட்டுபவர் 'அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும்' நம் தலைவர் 'ஜம்ப்' ஆகலாம் என காத்திருக்கிறாராம்.

English summary
Here is the Gossip on Tamilnadu Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X