சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் தாய்ப்பால் தரலை.. சிக்கிய ரேவதி.. சாமர்த்தியமாக செயல்பட்ட நர்ஸ் ஜூலியட்.. குவியும் பாராட்டுகள்!

குழந்தை கடத்திய பெண் குறித்து நர்ஸ் துப்பு தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசை வார்த்தை கூறி குழந்தையை கடத்திய பெண் - வீடியோ

    சென்னை: நர்ஸ் ஜூலியட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. மெரினாவில் 7 மாத குழந்தையை கடத்திய ரேவதியை கண்டுபிடிக்க காரணமாக இருந்தது இந்த நர்ஸ்தான்.. "குழந்தைக்கு தாய்ப்பால் குடுக்கல.. புட்டிப்பால்தான்.. அப்பதான் எனக்கு சந்தேகம் வந்தது" என்கிறார் நர்ஸ் ஜூலியட்!

    வடமாநில தம்பதிகள் ஜான்போஸ்லே - ரந்தீஷா ஆகியோர் மெரினாவில் பலூன் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களது 7 மாத குழந்தை ஜானை, 24 வயது இளம்பெண் ரேவதி என்பவர் கடத்திவிட்டார்.

    சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டினார்.. தினமும் 100, 200 ரூபாய்க்கு அல்லல்படும் நிலையில், ஒருநாளைக்கு 2 ஆயிரம் தருவதாக சொல்லவும் பெற்றோரும் மண்டையை ஆட்டினர்.

    நர்ஸ்

    நர்ஸ்

    குழந்தையை கடத்திய பெண்ணை, 25 சிசிடிவிக்களை ஆய்வு செய்து தேடி வந்த நிலையில், ஒரு நர்ஸ்தான் உதவியுள்ளார். எழும்பூர் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்ஸ் ஜூலியட், போலீசுக்கு துப்பு தந்ததையடுத்து, கடத்தல் பெண்ணை போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டனர். இதை பற்றி நர்ஸ் ஜூலியட் போலீசாரிடம் விவரித்தார்.

    அட்மிஷன்

    அட்மிஷன்

    அப்போது "குழந்தை அழுதுட்டே இருந்தது.. பொதுவாக இந்த ஆஸ்பத்திரியில் தாய்ப்பால்தான் குழந்தைக்கு தருவார்கள்.. ஆனால், அந்த பெண் புட்டிப்பாலை தந்தார்.. இதுதான் எனக்கு சந்தேகமாக இருந்தது.. உடனே போய் நான் கேட்டேன், ஏன் தாய் பால் தரலேன்னு.. அதற்கு குழந்தைக்கு உடம்பு சரியில்லை, அதனால்தான் தரலைன்னு சொன்னார். ஆனால் அந்த பெண் அட்மிஷனும் போடாமல் வார்டுக்குள் திரிந்து கொண்டிருந்தார்.

    சாம் பெயர்

    சாம் பெயர்

    இது எனக்கு அடுத்த சந்தேகத்தை தந்தது.. இதை பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் சொன்னதும், மறுநாள் பெண் குழந்தை பெயர் ரிஜிஸ்டர் செய்தார்கள். ஆனால் பெயர் சாம் என்று போட்டிருந்தார். பெண் குழந்தை சாம் என்று பெயர் இருந்தது அடுத்த சந்தேகத்தை கிளப்பியது.

    சிசிடிவி காட்சி

    சிசிடிவி காட்சி

    இந்த சமயத்தில்தான் 18-ம் தேதி போலீஸார் எங்க ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரிக்கும்போது, இந்த தகவலை சொன்னேன்.. உடனே அவர்களும் சிசிடிவி காட்சியை பார்த்து, அந்த பெண்ணை உறுதி செய்தனர்... பெண்ணை மடக்கி பிடித்தபோதுகூட, அது என் குழந்தைங்க என்று அழுது சாதித்தார்" என்றார்.

    English summary
    chennai egmore government hospital nurse juliet says about kidnapped lady revathi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X