சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு பயமாக இருக்கிறது.. பொருளாதார ஆய்வறிக்கை பற்றி ப.சிதம்பரம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: 2018-19 ஆம் ஆண்டிற்கான அரசின் பொருளாதார ஆய்வு "மிருதுவானது" மற்றும் "அவ நம்பிக்கையுடனானது" என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார்.

மத்திய அரசின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனால், ராஜ்யசபாவில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

Government appears to be pessimistic about economy: P. Chidambaram

இதில் காணப்படும் அம்சங்கள் பற்றி சிதம்பரம் இன்று தனது விமர்சனங்களை முன் வைத்தார். அவர் கூறியவற்றை பாருங்கள்:

இந்த ஆய்வறிக்கையில், துறைவாரியான வளர்ச்சி விவரம் இல்லை. அரசு பேசும் பொருளாதாரம், அவநம்பிக்கை கொண்டதாக எனக்குத் தோன்றுகிறது.

நான் 2019-20க்கான அவுட்லுக்கைத் தேடினேன், இது தொகுதி (Volume) -2, அத்தியாயம் (Chapter) 1 இல் உள்ளது, ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற பொதுவான வார்த்தை மட்டுமே உள்ளது. துறைவாரியாக எவ்வளவு வளர்ச்சி கிடைக்கும் என தெரிவிக்கப்படவில்லை.

2019-20க்கான எதிர்கால திட்டத்தை விவரிக்கும் வகையில் மிக பொருந்தக்கூடிய தகவல்களை, தொகுதி -2, அத்தியாயம் 02 இல் காணலாம்.

"பொருளாதார ஆய்வு நிலைகள் (1) மந்தமான வளர்ச்சி, (2) வருவாயின் பற்றாக்குறை, (3) நிதிப் பற்றாக்குறை இலக்கை சமரசம் செய்யாமல் புதிய மூலதனங்களை கண்டறிதல், (4) நடப்புக் கணக்கில் எண்ணெய் விலைகளின் தாக்கம் மற்றும் (5) 15ம் நிதி கமிஷன் பரிந்துரைகள். இவை எல்லாம் உள்ளன. இவை எதுவும் நேர்மறையானவை அல்லது ஊக்கமளிப்பவை அல்ல, இதனால் நான் பயப்படுகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு 7 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

English summary
The government’s Economic Survey for 2018-19 is “bland” and "pessimistic", said Congress leader and former finance minister P Chidambaram on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X