சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை

Google Oneindia Tamil News

சென்னை: கல்பாக்கம் அணு மின்நிலையத்தால் கதிர்வீச்சு ஏற்படலாம் என்பதால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் இனிமேல் நிலம் பத்திரப் பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது.

இந்திய அரசின் அணு ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அணுமின் கழக நிர்வாகத்தின் கீழ் கல்பாக்கம் அணு உலை செயல் பட்டு வருகிறது.

தேரியம் பயன்பாடு

தேரியம் பயன்பாடு

இந்த ஆலை இந்திய அறிவியல் வல்லுனர்கள் வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளை கொண்டுள்ளது. இந்த அணு உலைக்கு எரிபொருளாக தோரியம் பயன்படுத்தப்படுகிறது.

1985 முதல்

1985 முதல்

1983ல் முதல் அணுஉலையும் 1985ம் ஆண்டு இரண்டாவது அணு உலையும் செயல்பாட்டிற்கு வந்தது. 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரை ஒவ்வோர் அலகிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கல்பாக்கத்தத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

கதிர்வீச்சு

கதிர்வீச்சு

இந்நிலையில் ல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர நிலை பிரகடனத்தின் போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், புதிதாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் இனிமேல் நிலம் பத்திரப் பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள சதுரங்கப்பட்டினம் மற்றும் கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமை பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம் உள்பட 14 ஊராட்சிகளில் இனிமேல் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
The Central Government has banned the registration of land deeds in 14 villages around the Kalpakkam nuclear power plant as it could cause radiation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X