டிரைவர்கள் செல்போன் பேச கூடாது! நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர வேண்டும்! போக்குவரத்து துறை அதிரடி
சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் செல்போன் பேச தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் கவனத்திற்கு.. தமிழகத்தில் இனி இந்த மோட்டல்களில்தான் அரசு பேருந்து நிற்கும்.. லிஸ்ட் இதோ
அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பேசிக்கொண்டே ஓட்டும் போது விபத்து நேரிடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் விஷயத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, தரமற்ற ஓட்டல்களில் பேருந்துகள் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி, தரமான உணவகங்களில் நிறுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் இடைய பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், பணியின் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் செல்போன் பேச தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அரசு பஸ்களை இயக்கும் டிரைவர்கள் செல்போன் வைத்து இருக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போனை வைத்து இருப்பது தெரியவந்தால் அவர்கள் 2 நாட்களுக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் போது தங்களின் செல்போன்களை நடத்துநர்களிடம் கொடுத்து வைத்திருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.