சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு

Google Oneindia Tamil News

மதுரை: கட்டணமில்லா கழிப்பறைகள் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லியில் உள்ள நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்ற மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இவ்விகாரத்தில் டெல்லியை பின்பற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து, அங்கு சென்று ஆய்வு செய்து தமிழகத்திலும் அதை நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Government of Tamil Nadu is obliged to follow Delhi in setting up a toll free toilet

டெல்லியில் கட்டணமில்லாத கழிப்பறைகள் தான் உள்ளன. அவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றன. கழிப்பறையின் சுவர்களில் விளம்பரம் செய்ய அனுமதித்து வருமானம் ஈட்டுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் டெல்லியை பின்பற்றுவதே சரியாக இருக்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

சைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு சைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

பொது இடங்களில் சுகாதாரமான, கட்டணமில்லா கழிப்பறைகள் அமைக்கக் கோரிய வழக்கில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் குழு அமைத்து தமிழகத்திலும் சுகாதாரமான கட்டணமில்லா கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டடுள்ளனர்.

முன்னதாக சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் சுகாதாரமான இலவச கழிப்பறை வசதிகளை உருவாக்கி தரப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் உள்ள கழிப்பறையில் நபர் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனாலும் கழிப்பறைகளில் தூய்மை இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரமான இலவச கழிப்பறை வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In a case relating to the creation of toll free toilets, the High Court ordered Madurai to follow the procedure in Delhi...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X