சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாக்டர் கோட் ஸ்டெதஸ் கோப் மாட்டிய அரசு பள்ளி மாணவர்கள்... முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி

அரசு பள்ளியில் பயின்ற பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டது அதற்கான ஆணையை முதல்வர் வழங்கினார். இதைக்கண்ட பெற்றோர்கள் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன

Google Oneindia Tamil News

சென்னை: 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மூலமாக மருத்துவம் படிப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப்புடன் மருத்துவ சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மருத்துவ கனவை நனவாக்கிய முதல்வருக்கு பெற்றோர்களும், மாணவர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இந்த ஒதுக்கீட்டின் மூலமாக, 405 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைக்கும். இதற்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்கியதன் பேரில், நடப்பாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை 7.5% ஒதுக்கீட்டுடன் நடைபெறும் என அரசு அறிவித்தது.

இன்று காலை 9 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதற்கட்டமாக பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், உள்ஒதுக்கீட்டின் மூலமாக இன்று 18 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

திமுக கொடுக்கிற தொகுதிகளே போதும்...வழக்கம் போல செலவை பார்த்துக்குவாங்க...ஆறுதல் மூடில் இடதுசாரிகள் திமுக கொடுக்கிற தொகுதிகளே போதும்...வழக்கம் போல செலவை பார்த்துக்குவாங்க...ஆறுதல் மூடில் இடதுசாரிகள்

மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை

மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை

இந்த நிலையில், அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் 18 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப்புடன் மருத்துவ சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். இதனால், பெரும் மகிழ்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

முதல்வர் பெருமிதம்

முதல்வர் பெருமிதம்

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்னாள். அரசுப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் எனக்கு மனநிறைவை ஏற்படுத்திய நாள். கொள்கை அளவில் நீட் தேர்வுக்கான தமிழக அரசின் எதிர்ப்பு தொடரும். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம்.

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு

அரசு பள்ளியில் படித்துவரும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம். நீட் தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு, வசதி குறைவாக இருந்தது. 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 49 சதவிகிதம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்காக சட்டம்

ஏழை மாணவர்களுக்காக சட்டம்

பல தடைகளை தாண்டி இந்த சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. நான் முதல்வராக பொறுப்பேற்றப் பின் தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினார் முதல்வர் பழனிச்சாமி.

English summary
Chief Minister Edappadi Palanisamy has issued an order for admission to medical schools with a stethoscope to selected government school students to study medicine with an internal allocation of 7.5 per cent. Parents and students thanked in tears for making the medical dream a reality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X