சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்

Google Oneindia Tamil News

சென்னை: 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்காக அதிமுக அரசுடன் இணைந்து திமுக போராட தயார் என ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Governor explains about 7.5% reservation for rural students in TN

அந்த கடிதத்தில் ஆளுநர் கூறுகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்களுக்கு கால அவகாசம் தேவை. என்னை சந்தித்த அமைச்சர்களிடமும் 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என குறிப்பிட்டிருந்தேன்.

நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்து அனைத்து கோணங்களில் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என ஆளுநர் பதில் கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

Governor explains about 7.5% reservation for rural students in TN

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ! சென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ!

அந்த கடிதத்தில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார் ஸ்டாலின்.

English summary
Governor Banwarilal Purohit explains that need 3 to 4 week time extension to decide on 7.5 % medical inter reservation bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X