சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளுநர் உரை புறக்கணிப்பு... தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு-வீடியோ

    சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ், இ.யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    Governors speech boycott... DMK Members walk out

    பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது, முக்கிய பிரச்சனைகளை பேச சபாநாயகர் அனுமதி தராததால் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம். தமிழக அரசு எழுதி கொடுத்த உரையை ஆளுநர் சபையில் வாசித்து கொண்டிருக்கிறார்.

    ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது, கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம், விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் உள்ளிட்ட பிரச்னைகள் தீரவில்லை.

    தமிழக அரசு கேட்ட கஜா புயல் முழு நிவாரண தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. பெற முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசு அனைத்து மட்டங்களிலும், துறைகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறது! குட்கா ஊழல் உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் பதவி விலகியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    English summary
    DMK Members walked out ignoring Governor's speech from the Tamil Nadu Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X