சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்.1ல் பள்ளிகள் திறப்பு இல்லை.. பள்ளிகள் திறப்பு எப்போது.. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டேபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் 3வது வாரத்தில்இருந்து கடந்த ஆறுமாதங்களாக மூடிக்கிடக்கின்றன. பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும் என்கிற நிலை இப்போது உள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டுமெனில், தொலைக்காட்சிகளில் வரும் பாடங்களை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி உள்பட பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது.,

கொரோனா கண்டெய்ண்மென்ட் ஜோனாக சமயபுரம் அறிவிப்பு.. ஒரு வாரத்துக்கு கடைகள் மூடல் கொரோனா கண்டெய்ண்மென்ட் ஜோனாக சமயபுரம் அறிவிப்பு.. ஒரு வாரத்துக்கு கடைகள் மூடல்

பள்ளிக்கு செல்லலாம்

பள்ளிக்கு செல்லலாம்

இதனிடையே மத்திய அரசு வழிகாட்டுதல்களின் படி, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் ஒப்புதலுடன் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அவசரம் வேண்டாம்

அவசரம் வேண்டாம்

மாணவர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் விஷயத்தில் அரசு சரியான முடிவெடுக்க வேண்டும் என்றும் அவசர கதியில் முடிவெடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தின.

பள்ளி செல்லும் உத்தரவு

பள்ளி செல்லும் உத்தரவு

இதனிடையே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற தமிழக அரசின் அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு எப்போது

பள்ளிகள் திறப்பு எப்போது

மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு இல்லை

பள்ளிகள் திறப்பு இல்லை

இதனால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆலோசனை பெற போக முடியாது. பள்ளிகளும் திறக்கப்படாது என்று உறுதியாகி உள்ளது. எனினும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மருத்துவ குழுவை ஆலோசித்த பின்னர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவ குழுவை முதல்வர் பழனிசாமி இன்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister Edappadi Palanisamy has announced that the government suspend 10th, 11th and 12th class students from going to school from October 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X