சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் இயக்குநர் கவுதமன்.. கட்சியின் பெயர், கொடி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: இயக்குநர் கவுதமன் புதிய அரசியல் கட்சியை இன்று தொடங்கினார்.

தமிழ் திரைப்பட இயக்குநரான இவர் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அனைவருக்கும் பரீட்சயமானார். அதைத் தொடர்ந்து தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.

Gowthaman starts Political party

காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க முன்னெடுக்கும் முயற்சிகள், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம் என விவசாய நிலங்களை சுரண்டுவதற்காக போடப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடிய விவசாயிகளுக்கு களத்தில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

நீட் தேர்வில் அனிதா மரணம், தூத்குக்குடி ஸ்டெர்லைட் ஆலை, துப்பாக்கிச் சூடு விவகாரம், காவிரி பிரச்சினை என பல்வேறு போராட்டங்களில் தன்னை முன்னிறுத்தியவர் கவுதமன்.

தமிழ் இன உணர்வு, தமிழர் நிலம் உரிமை என தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று அரசியல் கட்சியை தொடங்கினார்.

கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து பொங்கல் பண்டிகையில் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தியவர் கவுதமன்.

English summary
Director Gowthaman started political party today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X