சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மாஸ்டரை" பார்க்க பாட்டியுடன் வந்த கண் பார்வையற்ற நபர்.. ப்ரீ டிக்கெட் கொடுத்த தியேட்டர் நிர்வாகம்

Google Oneindia Tamil News

சென்னை: பாட்டி விஜய் ரசிகையா என கேட்டு அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து கொண்டு வந்த பணத்தை வாங்க மறுத்து தியேட்டர் நிர்வாகம் இலவசமாக டிக்கெட் வழங்கியது. அந்த பாட்டியுடன் கண் பார்வை இல்லாத பேரனும் வந்திருந்தார்.

மாஸ்டர் திரைப்படம் போகி பண்டிகை அன்று ரிலீஸானது. இந்த படம் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு வெளியானது என்பதால் எதிர்பார்ப்புகள் எழுந்தன. விஜய்யும் ஒரு தியேட்டரில் மக்களுடன் அமர்ந்து படம் பார்த்திருந்தார்.

Grandmother came for Master movie

இந்த படத்தில் விஜய் வேற லெவலில் நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள், பாடல்கள் அனைத்து ஹிட்டாம். குட்டி ஸ்டோரி பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை என்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி இல்லை என்பதால் டிக்கெட்டை பெற ரசிகர்கள் போட்டி போடுகிறார்கள்.

இந்த நிலையில் நெகிழ்ச்சியான ஒரு வீடியோ வெளியாகி தியேட்டர் நிர்வாகத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. அந்த வீடியோவில் ஒரு பாட்டி கையில் உள்ள சில்லரைகளை டிக்கெட் கவுன்டரில் வைக்கிறார். அப்போது இவருக்கு கண் தெரியாது. விஜய் படம் பார்க்க வேண்டும் என கேட்டான் என்கிறார்.

அப்போது பாட்டி நீங்கள் விஜய் படம் பார்க்க வந்தீங்களா என கேட்கிறார், டிக்கெட் கவுன்ட்டரில் இருக்கும் நபர். அதற்கு ஆமாம், கஷ்டப்பட்டு சம்பாதிச்சு காசு கொண்டு வந்திருக்கேன் என்கிறார். காசெல்லாம் வேண்டாம் பாட்டி, என அந்த நபர் இலவசமாகவே பாட்டிக்கு டிக்கெட் தருகிறார்.

இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. தியேட்டர் நிர்வாகத்தினரின் கருணையே கருணை என்கிறார்கள் நெட்டிசன்கள். கண் பார்வை இல்லாத பேரன் பார்க்க வேண்டும் என்பதற்காக எப்படியோ காசை தேற்றிய பாட்டிக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

English summary
A video goes viral that a grandmother with her blind grand son came for Master and get free ticket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X