சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"குற்றாலம்" குளுகுளு.. குதூகலத்தில் குவிந்த மக்கள்.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. எங்கேனு பாருங்க

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்‍கு மழை பெய்யக்‍கூடும் என்றும், நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Recommended Video

    07 June 2022 | சென்னையில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழை - வீடியோ

    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    கடந்த வாரம் வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது..

     ஹைய்யா.. குடை ரெடியா மக்களே.. இன்றும் நாளையும் அடிச்சு ஊத்த போகுது மழை.. எங்கேன்னு பாருங்க ஹைய்யா.. குடை ரெடியா மக்களே.. இன்றும் நாளையும் அடிச்சு ஊத்த போகுது மழை.. எங்கேன்னு பாருங்க

    லேசான மழை

    லேசான மழை

    நேற்றைய தினம், அதாவது 3 ம் தேதியும் இன்று 4-ம் தேதியும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருந்தது.. அதேபோல, நாளை 5-ம் தேதியும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    காரைக்கால்

    காரைக்கால்

    இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்‍கு மழை பெய்யக்‍கூடும் என்றும், நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது: "மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்‍கால் பகுதிகளில் இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சூறாவளிக்காற்று

    சூறாவளிக்காற்று

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக - ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று, சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இதனிடையே, குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் இதுவரை தொடங்கவில்லை என்ற போதிலும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மழை குறைந்ததால், அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக காணப்பட்டது என்றாலும், விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்தது... மெயின் அருவி, ஐந்தருவிகளில் மட்டுமே தற்போது குளிப்பதற்கான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளியலிட்டு உற்சாகம் அடைந்தனர். சீசன் தொடங்காத நிலையில், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    English summary
    great news for tamilnadu, puducherry and heavy rain for next 5 days, says, chennai met office தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X