சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை.. ரூ.12305 கோடியை வழங்கியது மத்திய அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 12305 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

நாடு முழுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை இன்று வழங்கியது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.

GST Tax: Tamilnadu gets 12305 Cr Rs as the compensation from Central

இந்த நிலையில் 2019-2020 ஆண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை 1,65,302 கோடியை மத்திய அரசு இன்று வெளியிட்டது. 2017ல் இந்த ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. மாநிலத்தின் வளர்ச்சியை பொறுத்து இந்த இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மாநிலத்தின் வளர்ச்சி 14%ஐ விட குறைவாக இருந்தால் இந்த இழப்பீடு வழங்கப்படும். இந்த முறை இந்த இழப்பீட்டு தொகையை அரசு தவணை முறையில் வழங்குகிறது.

கொரோனா பாதிப்பு.. மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி பெருமிதம்!கொரோனா பாதிப்பு.. மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி பெருமிதம்!

அந்த வகையில் இந்த வருடத்திற்கான இழப்பீட்டு தொகையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 12305 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதேபோல் புதுச்சேரிக்கு ரூ. 1057கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்கியது.

இதன் மூலம் 2019-2020-ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பிட்டுத்தொகை முழுவதும் வழங்கப்பட்டு விட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English summary
GST Tax: Tamilnadu gets 12305 Cr Rs as the compensation from Central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X