சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மினி சட்டசபை தேர்தல்.. விரைவில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. அதிமுக வியூகம்.. திமுக என்ன செய்யும்?

தமிழகத்தில் காலியாக இருக்கும் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் காலியாக இருக்கும் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிமுக ஆட்சி பதவிக்காலம் மே 24ம் தேதியோடு முடிவடைகிறது. இதனால் சட்டசபை தேர்தலுக்காக அதிமுக, திமுக கூட்டணி இரண்டும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் அடுத்தடுத்து திமுக எம்எல்ஏக்கள் இருவர் பலியானார்கள். இதனால் தமிழக சட்டசபையில் திமுகவின் பலம் குறைந்துள்ளது. திமுக எம்எல்ஏக்கள் இன் பலம் 98 ஆக குறைந்துள்ளது.

எப்படி

எப்படி

ஏற்கனவே விக்கிரவாண்டி, நான்குநேரி தொகுதி திமுக கூட்டணி வசம் இருந்தது. இந்த இரண்டு தொகுதியிலும் திமுக கூட்டணி தோல்வி அடைந்தது. இதனால் திமுகவின் பலம் சட்டசபையில் குறைந்தது. திமுகவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாத போது கூட அதிமுக எளிதாக இடைத்தேர்தலில் வென்றது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இதனால் கட்சி செயலாளர்கள் சிலரை கடுமையாக கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடுமையாக கண்டிப்பு

கடுமையாக கண்டிப்பு

அதை தொடர்ந்து திமுகவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் ஏற்பட்டது. முதலில் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு அடுத்த நாளே குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணமடைந்தார். திமுக எம்எல்ஏக்கள் இப்படி அடுத்தடுத்து மரணம் அடைந்தது அக்கட்சியின் பலத்தை மேலும் குறைத்தது.

என்ன தேர்தல்

என்ன தேர்தல்


இந்த நிலையில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய, இரண்டு சட்டசபை தொகுதிகளும் காலியானதாக சட்டசபை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். பொதுவாக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு
1 வருடத்திற்கு உள்ளாகி தொகுதிகள் காலியானால், அதற்கு இடைத்தேர்தல் நடக்காது. 1 வருடத்திற்கு பிறகு, சட்டசபை தேர்தலோடு சேர்த்துதான் இடைத்தேர்தல் நடக்கும். ஆனால் இந்த திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் நிலை அப்படி இல்லை.

அதிக காலம்

அதிக காலம்

அடுத்த வருடம் மே 24ஜ கணக்கில் கொண்டால், சட்டசபை தேர்தல் நடப்பதற்கு இன்னும் 1 வருடம் 3 மாதம் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பெரும்பாலும் மே மாதம் இந்த தேர்தல் நடக்கும் என்கிறார்கள்.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இந்த திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் ஒரு மினி சட்டசபை பொதுத்தேர்தல் போல இருக்கும் என்கிறார்கள். இந்த தொகுதிகளில் கள நிலவரம் எப்படி இருக்கிறது. மக்கள் அதிமுக மீது எப்படி நம்பிக்கை வைத்துள்ளனர், ஆட்சி பிடித்து இருக்கிறதா என்று தெரிந்துவிடும். இன்னொரு பக்கம் திமுக மீண்டும் இடைத்தேர்தலில் வெற்றிபெறுமா, லோக்சபா தேர்தல் வெற்றியை தொடருமா என்றும் தெரிந்துவிடும்.

அதிமுக எப்படி

அதிமுக எப்படி

இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள்தான் நிற்பார்கள். முக்கியமாக அதிமுக இந்த தேர்தலை கடந்த 3 வருட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கான மார்க் சீட் போல பார்க்கிறது. இந்த இடைத்தேர்தலை பொறுத்தே கூட்டணி கணக்குகள் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அதிமுக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யும், வியூகங்கள் வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக எப்படி

திமுக எப்படி

நாங்குநேரி , விக்கிரவாண்டியில் தோல்வி அடைந்த திமுக கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக முயலும். முக்கியமாக திமுகவிற்கு தற்போது தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் வேறு நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் வருகை, அவரின் ஸ்டைல் கட்சிக்கு எப்படி உதவும் என்பதும் இந்த இடைத்தேர்தலில் தெரிந்துவிடும். இந்த இரண்டு தொகுதியும் திமுக எம்எல்ஏக்கள் இருந்த தொகுதி என்பதால் அதிக கவனம் பெறுகிறது.

English summary
Gudiyatham and Tiruvottiyur by-elections may become a mini Assembly poll in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X